பெரம்பலூர், ஆக.23- பெரம்பலூர் அடுத்த எசனை யில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி மூட நம்பிக்கை ஒழிப்பு – பெண் ணுரிமை பாதுகாப்பு இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்க பரப்புரை கூட்டமானது பெரம்பலூர் மாவட்ட தலைவர் சி.தங்கராசு தலைமையில் 22/8/2024 அன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தின் துவக்கமாக மாவட்ட அமைப்பாளர் பெ .துரைசாமி வரவேற்புரையாற்றினார், அதனைத் தொடர்ந்து “மந்திரம் அல்ல தந்திரமே” என்கிற அறிவியல் கலை நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் மு.விச யேந்திரன் செய்து காட்டினார்.
இந்திய அரசியல் சட்டம் 51A(h) குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் விதமாக தலை மைக் கழக பேச்சாளர் வழக்கு ரைஞர் பூவை.புலிகேசி சிறப்பு ரையாற்றினார்.
இக்கூட்டத்தில் திமுக பொதுக் குழு உறுப்பினர் முகுந்தன், மதிமுக ஆலோசனை குழு உறுப்பினர் துரைராஜ், இந்திய தொழிலாளர் கட்சியின் மாநிலத் தலைவர் ஈஸ்வரன், பகுத்தறிவாளர் கழகம் (ஆத்தூர்) முருகானந்தம் ஆகியோர் பங்கேற்று மூடநம்பிக்கை ஒழிப்பு குறித்து பரப்புரை செய்தனர்.
மேலும் இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் அரங்கராசன், பெரம்பலூர் ஒன்றிய தலைவர் பெரியசாமி, பெரம்பலூர் ஒன்றிய அமைப்பாளர் அண்ணாதுரை, நகர அமைப்பாளர் துரைசாமி, வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் சின்னசாமி, வேப்பூர் ஒன்றிய அமைப்பாளர் அரங்கையா, நகர செயலாளர் ஆதிசிவம் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.