நம் நாட்டில் ஆதார் அட்டை ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் பல பணிகளுக்காக தேவைப்படும் முக்கியமான அடையாள ஆவணமாக செயல்பட்டு வருகிறது. வங்கி சேவைகளை பெறுவது முதல் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது வரை அனைத்திற்கும் ஆதார் அட்டை தேவைப்படுகிறது. எனவே ஆதார் அட்டையை உங்கள் அலைபேசி எண்ணுடன் இணைப்பதும் கட்டாயம். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஆதார் தொடர்பான பல சேவைகளை ஆன்லைனில் தான் பெறுகிறோம். இந்நிலையில் ஒரே ஒரு அலைபேசி எண்ணில் எத்தனை ஆதார் அட்டைகளை இணைக்க முடியும் என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். அனைத்திற்கும் ஆதார் அட்டை தேவைப்படுவதால் OTP சரிபார்ப்பு செயல்முறையை செய்வதற்கு கண்டிப்பாக ஆதார் அட்டை கைப்பேசி எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆதார் அட்டை: ஒரே ஒரு அலைபேசி எண்ணில் எத்தனை ஆதார் அட்டைகளை இணைக்கலாம்? UIDAI சொல்வது என்ன? ஆன்லைன் ஆதார் சேவைகளைப் பெற, உங்கள் மொபைல் நம்பருடன் ஆதார் கார்டை இணைப்பது அவசியம். அப்படியானால் ஒவ்வொரு ஆதார் அட்டைதாரருக்கும் தனித்தனி மொபைல் நம்பர் தேவையா? என்ற கேள்வி எழலாம். அதற்கான பதில் இல்லை என்பதே. எந்த குடும்ப உறுப்பினரின் ஆதார் கார்டை வேண்டுமானாலும் ஒரே மொபைல் நம்பருடன் இணைக்க முடியும். ஒரே மொபைல் நம்பருடன் பல ஆதார் அட்டைகளை இணைக்க முடியும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது குடும்ப உறுப்பினர்கள் தங்கள் ஆதார் இணைப்பிற்கு ஒரு முக்கிய உறுப்பினரின் அலைபேசி எண்ணைப் பயன்படுத்தலாம்.
அலைபேசி எண்ணை ஆதாருடன் இணைப்பதன் நன்மைகள்: உங்கள் மொபைல் நம்பரை ஆதார் அட்டைடன் இணைப்பது, OTP அடிப்படையிலான செயல்முறையை எளிதாக்கும்.
ஒரே நம்பரை பயன்படுத்துவதன் விளைவுகள்: ஒரே ஒரு மொபைல் நம்பரை பயன்படுத்தி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆதார் கார்டை இணைத்துக் கொள்ளலாம் என்று UIDAI அறிவித்தாலும்.. சில நேரங்களில் OTP செயல்முறையை முடிப்பதில் சிக்கல் ஏற்படலாம். உதாரணமாக குடும்ப உறுப்பினரின் ஒரே ஒரு மொபைலில் நம்பரைக் கொண்டு ஆதார் கார்டை இணைத்த மற்றொரு நபர் ஏதேனும் சேவையைப் பெற OTP தேவைப்பட்டால்.. அந்த நேரத்தில் போன் செய்து கேட்டு அதன் பிறகு செயல்முறையை முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். இதனால் காலதாமதம் ஆகலாம். அதுவும் சில OTP நம்பரை குறிப்பிட்ட வினாடிக்குள் பயன்படுத்த வேண்டும். இல்லை எனில் அவை எக்ஸ்பைரி ஆகிவிடும். இதுபோன்ற சிக்கல் இல்லாமல் இருந்தால் ஒரே ஒரு நம்பரை வைத்து எத்தனை ஆதார் கார்டை வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம்.
156 மருந்துகளுக்கு தடை
சென்னை, ஆக.23- நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் மருந்து, மாத்திரைகள், ஒன்றிய, மாநில அரசுகளின் மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதன்படி, போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
அவற்றில் சளித்தொற்று, குடற்புழு நீக்கம், கால்சியம் குறை பாடு, கிருமித்தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப் படும் 70 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. அந்த மருந்துகளில் பெரும்பாலானவை இமாசலப் பிரதேசம், கருநாடகம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை ஆகும். அதன் விவரங்களை ஒன்றிய மருந்து தரக்கட்டுப் பாட்டு வாரியம், cdsco.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காய்ச்சல், சளி, ஒவ்வாமை மற்றும் வலி நிவாரணி ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்படும் பாக்டீரியா எதிர்ப்பு மருந்துகள் உட்பட பரவலாக விற்கப்படும் 156 மருந்துகளுக்கு தடை விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. அவற்றில் பாரசிட்டமால் 125 எம்.ஜி. மாத்திரை, பாரசிட்டமால் ஊசி, டிராமாடோல் வலிநிவாரணி உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை.