23.8.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஒன்றிய அரசு ஓபிசி மக்கள் தொகையையும் கூடுதலாக சேகரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
* ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசும் தேசிய மாநாட்டுக் கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டி.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* அதானி, செபி தலைவர் பதவி விலகல் மீதான குற்றச்சாட்டுகளை ஜேபிசி விசாரிக்கக் கோரி நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது
தி டெலிகிராப்:
* ஹிந்து சமூகத்தில் தீண்டத்தகாதவர்கள் என்ற தகுதி காரணமாக பட்டியலிடப்பட்ட அனைத்து ஜாதியினரும் அவ்வாறு கருதப்படுகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இட ஒதுக்கீடு என்று வரும்போது, பலன்களைப் பெறுவதற்கான அடிப்படை அவர்களின் தகுதி அல்ல, மாறாக அவர்களின் பிற்படுத்தப்பட்ட நிலை என்பது தான் அரசியல் சட்ட விதிகள் கூறும் நிலை ஆகும் என்கிறார் கட்டுரையாளர் அர்கயா சென்குப்தா.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* நெஞ்சுக்கு நீதி, குறளோவியம் உட்பட முத்தமிழறிஞர் கலைஞரின் அனைத்து நூல்களும் தமிழ்நாடு அரசு சார்பில் நூல் உரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
– குடந்தை கருணா