சிவகங்கை, ஆக. 9- சிவகங்கை மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரை யாடல் கூட்டம் 6.8.2023 அன்று மாலை சிவகங்கை மாவட்ட திராவிடர் கழக தலைவர் இரா. புகழேந்தியின் யாழகம் இல்லத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பகுத்தறிவாளர் கழகம் மாநில பொதுச் செயலாளர் வி.மோகன் தலைமை தாங்கி உரையாற்றினார். பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் அ.சரவணன் கருத்துரை வழங் கினார். இறுதியாக பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன், பகுத்தறிவாளர் கழகத்தின் நோக்கம், அதன் செயல் பாடுகள் பற்றி எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, சிவகங்கை மாவட்ட பகுத்தறிவாளர் கழ கத்திற்கு புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டார்கள். சிவ கங்கை மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவராக (மின் வாரியம்) திருப்புவனம் சு. இராசாங்கம், மாவட்ட செயலாளராக, தமிழ் நாடு உயர் நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சிவகங்கை மாவட்ட சட்ட செய லாளரும், சொக்கநாதபுரம் கிளை நூலகத்தின் வாசகர் வட்டத் தலை வருமான கவிஞர் இரா. கணேசன், மாவட்ட அமைப்பாளராக அனைத் துத் துறை ஓய்வு பெற்ற அரசு ஊழி யர் சங்க தலைவர் சு.செல்லமுத்து புதிய பொறுப்பாளர்களாக அறி விக்கப்பட்டனர்.
இக்கலந்துரையாடல் கூட்டத் தில் சிவகங்கை மாவட்ட திரா விடர் கழக தலைவர் இரா.புக ழேந்தி, மாவட்ட செயலாளர் பெரு.இராசாராம், மாவட்ட காப்பாளர் வழக்குரைஞர்.ச. இன்ப லாதன், காரைக்குடி கழக மாவட்ட செயலாளர் ம. கு. வைகறை, வே.கார்த்திகா ராணி புகழேந்தி, மானாமதுரை முஸ்தபா, கோபால் ஆகியோர் கலந்து கொண்டு சிறப் பித்தனர். இறுதியாக சிவகங்கை மாவட்ட திராவிடர் கழக அமைப் பாளர் ச.அனந்தவேல் நன்றி உரை கூறினார்.