வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு ஒரே ஆண்டில் 14 லட்சம் குறைவு!

2 Min Read

சென்னை, ஆக. 22- போட்டித் தேர்வு மூலமே அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படு வதால், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வோர் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 14 லட்சம் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2, கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தவர்கள், அரசு வேலை கனவு டன் தங்களுடைய கல்வித் தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கங்களில் பதிவு செய்து வருகின்றனர். அவ்வாறு பதிவு செய்தவர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்கள் பதிவை புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு புதுப்பிக்க தவறியவர்களுக்கு 2 மாதம் கூடுதல் அவகாசம் வழங்கப்படுகிறது.
அந்த வகையில், கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் தேதி நிலவரப்படி, அரசு பணிக் காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் எண் ணிக்கை 70 லட்சத்து 30 ஆயிரத்து 345 ஆக இருந்தது. அது 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 31ஆம் தேதி கணக்குப்படி, 67 லட்சத்து 61 ஆயிரத்து 363 ஆக குறைந்தது.

தடாலடியாக குறைந்தது
கடந்த ஆண்டு (2023) ஜனவரி மாதம் 31ஆம் தேதி நிலவரப்படி, 67 லட்சத்து 58 ஆயிரத்து 698 ஆக சரிந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி கணக்குப்படி, 53 லட்சத்து 74 ஆயிரமாக தடாலடியாக குறைந்துபோய் இருக்கிறது.
இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 13 லட் சத்து 84 ஆயிரத்து 698 குறைவு ஆகும். விரி வாக பார்த்தோம் என்றால், கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி, வேலை வாய்ப்பு அலுவலகங் களில், 24 லட்சத்து 74 ஆயிரத்து 985 ஆண்கள், 28 லட்சத்து 98 ஆயிரத்து 847 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 284 பேர், மாற்றுத் திறனாளிகள் 1 லட்சத்து 49 ஆயிரத்து 803 பேர் பதிவு செய்துள்ளனர்.

ஆர்வம் இல்லை
இவர்களில், 18 வயதுக்கு கீழுள்ள பள்ளி மாணவர்கள் 10 லட்சத்து 69 ஆயிரத்து 609 பேர், 19 வயது முதல் 30 வயது வரையுள்ள இளைஞர்கள் 23 லட்சத்து 62 ஆயிரத்து 129 பேர்,31 வயது முதல் 45 வயது வரையுள்ள 16 லட்சத்து 94 ஆயிரத்து 518 பேர், 46 வயது முதல் 60 வயது வரையுள்ள 2 லட்சத்து 40 ஆயிரத்து 537 பேர், 60 வயதுக்கு மேல் உள்ள 7,323 பேர் அடங் குவார்கள்.
தற்போது, காலியாக உள்ள அரசு பணிகளின் அனைத்து நிலைகளுக்கும் டி.என்.பி.எஸ்.சி. மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தியே நிரப்பப்பட்டு வருகிறது. ஆசிரியர் பணி யிடங்களும் டி.ஆர்.பி.,டி.இ.டி. தேர்வுகள் மூலமே நிரப்பப்படுகிறது.
இதனால், வேலை வாய்ப்பு அலுவல கங்களுக்கு இனி வேலை யில்லை என்ற நிலை உரு வாகிவிட்டது. அதனால், அங்கு பதிவு செய்வதற்கு யாரும் ஆர்வம் காட்டாத நிலை ஏற்பட்டுள்ளது. வரும் காலங்களில் மேலும் இது குறை யும் என்று கூறப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *