கோதுமை, கேழ்வரகு ஒதுக்கீட்டை தேவையின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு உயர்த்த வேண்டும்
புதுடில்லி, ஆக.22 “தமிழ் நாட்டிற்கு கூடுதலாக வழங் கப்படும் அரிசியை கிலோ ரூ.20க்கு வழங்குவதுடன், கோதுமை, கேழ்வரகு ஒதுக் கீட்டை அதிகரிக்க வேண்டும்” என்று ஒன்றிய அமைச்சர் பிரக லாத் ஜோஷியிடம் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர்
அர.சக்கரபாணி கோரிக்கை விடுத்துள்ளார்.
டில்லியில் ஒன்றிய உண வுத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அமைச்சர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
நெல் அரவை மானியம் ரூ.2348.34 கோடி, கேழ்வரகு மானியம் ரூ.2.04 கோடி, பொது விநியோகத்திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், மதிய உணவுத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கான நிலுவைத் தொகை ரூ.13.17 கோடி, தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் (என்எப்எஸ்ஏ), பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா உள்ளிட்ட திட்டங்களின் கீழ் மாநிலங்களுக்கு இடையிலான நிலைத் தொகை நிலுவை ரூ.786.73 கோடி மற்றும் சர்க்கரைக்கான மானியம் ரூ.40.36 கோடி என ரூ.3,160.64 கோடி நிலுவைத் தொகையை விடுவிக்க வேண் டும்.மாநிலத்துக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி தவிர்த்து மாதம் தோறும் 75 ஆயிரம் டன் கூடுதல் அரிசி, பொது விநியோகத்திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், மதிய உணவு மற்றும் காலை உணவுத் திட்டங்களுக்கு தேவைப் படுகிறது. கடந்த ஜூலை 9-ஆம் தேதியிட்ட ஒன்றிய அரசின் கடிதத்தில் அந்த அரிசி கிலோ ரூ.28-க்கு இந்திய உணவுக்கழகம் மூலம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அந்த அரிசியை ஏற்கெனவே வழங்கப்பட்டது போல் கிலோ ரூ.20-க்கே வழங்க வேண்டும் என்று கோருகிறோம்.
மாநிலத்துக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் கேழ்வரகை தவிர்த்து 2,756 டன் கூடுதலாக தேவைப்படுகிறது. இந்த கேழ்வரகை, வெளிச்சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு மானிய விலையில் வழங்க வேண்டும். பொதுமக்களின் உணவுப்பழக்கத்தின் மாற்றத்தின் காரணமாக கோதுமை நுகர்வு அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு கோதுமை உற்பத்தி செய்யும் மாநிலம் அல்ல. உணவுக் கழகத் தின் விநியோகத்தை சார்ந்தே உள்ளது. மாதம் தோறும் 23 ஆயிரம் டன் கோதுமை தமிழ்நாட்டிற்கு சராசரியாக தேவைப்படுகிறது.
ஆனால், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாதம் 8576.02 டன் கோதுமையே ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்குகிறது. எனவே, மாதம் 23 ஆயிரம் டன் கோதுமை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
கடந்த 2013-2014,2015-2016 முதல் 2019-2020 வரையிலான கரீப் கொள்முதல் பருவத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச ஆதார விலை தொடர் பான கணக்குகளை இறுதி செய்து, மீதமுள்ள தொகையை அரசுக்கு வழங்க வேண்டும். நெல் அரவை மற்றும் கேழ் வரகுக்கான தற்காலிக பொரு ளாதார செலவுத் தொகை அதாவது மண்டி தொழி லாளர், போக்குவரத்து உள் ளிட்டவற்றை மறு நிர்ணயம் செய்ய வேண்டும்,” என்று அந்த மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.