சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் “குரங்கம்மை” கண்காணிப்புப் பணி

1 Min Read

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு

சென்னை, ஆக.22- சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் “குரங் கம்மை” கண்காணிப்புப் பணிகளை ஆய்வு செய்த தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன், தமிழ்நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என தெரிவித்துள்ளார்.
மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த 1970-களில் பரவிய குரங்கு அம்மை பாதிப்பு, அதன் பின்னா் முடிவுக்கு வந்தது. தற்போது பல்வேறு நாடுகளில் அந்நோய் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது. தமிழநாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை. இருந்தாலும், அண்டை நாடுகளில் அத்தகைய பாதிப்பு இருக் கும்பட்சத்தில் அதற்கான முன்னேற்பாடுகளை மக்கள் நல்வாழ்வுத் துறை மேற் கொண்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை பன்னாட்டு விமான நிலை யத்தில் “குரங்கம்மை” கண் காணிப்புப் பணி ஆய்வை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிர மணியன் நேற்று (21.8.2024) மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் மா. சுப்பிரமணி யன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: விமான நிலையங்களில் உடல் வெப்ப நிலை பரிசோ தனை செய்யப்பட்டு, வெப்ப நிலை அதிகமாக இருப்பவர்களை கண்டறியப்பட்டு, அவர் கள் தனி மைப்படுத்தப் பட்டு ராஜீவ் காந்தி மருத் துவமனைக்கு அனுப்பப் படுகிறார்கள்.
தமிழ்நாட்டில் யாருக்கும் குரங்கம்மை நோய் பாதிப்பு இல்லை. தொற்று அறிகுறி தெரிந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும். பாகிஸ்தானில் ஒருவருக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி மருத்துவ மனையில் 10 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு உருவாக்கப்படவுள்ளது. இந் நோய் தொற்று தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வரு கிறது. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித் தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *