22.8.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை
3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலை; 10 லட்சம் கோடிக்கு முதலீடுகள் குவிந்தன: முதலீட்டாளர் மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
‘அரசியல் சட்டத்தை காப்போம்’, ராகுல் தலைமையில் நாடு முழுவதும் கருத்தரங்கம் நடத்த காங்கிரஸ் முடிவு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
2021 மக்கள் தொகை கணக்கெடுப்பினை வரும் செப்டம்பரில் தொடங்க ஒன்றிய அரசு யோசனை.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இடஒதுக்கீட்டை தவிர்த்து கட்டமைக்கப்பட்ட ‘லேட்டரல் என்ட்ரி’ திட்டத்தை உருவாக்கியது. தற்போது, ரத்து செய்ததற்கு ‘சமூக நீதி’ என கூறும் ஒன்றிய அரசின் முரண்பாட்டை வெளிப்படுத்துகிறார் கட்டுரையாளர் ஜெய் மசூம்தார்.
தி டெலிகிராப்
தகுதியுடைய எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு பொதுப்பிரிவில் இடமளிக்க அனுமதிக்க மறுத்த மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு.
தி இந்து
அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை நடத்துவது குறித்து ஒன்றிய அரசு இன்னும் அழைப்பு விடுக்கவில்லை, ஆனால், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு சேர்க்கும் வகையில் தரவு சேகரிப்பை விரிவு படுத்துவதற்கான தீவிர விவாதம் நடந்து வருகிறது என்று அரசு உயர்மட்ட வட்டாரம் ‘தி இந்து’விடம் தெரிவித்தது.
– குடந்தை கருணா