ஆவடி, ஆக.22- ஆவடி மாவட்ட கழக மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம் 18-8-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில் மாவட்ட காப்பாளர் பா.தென்னரசு முன்னிலையில் மாவட்ட துணை தலைவர் மு.ரகுபதி வரவேற்புரையுடன் மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன் தலை மையில் மாவட்ட இளைஞரணி செயலாளர் எ.கண்ணன் கடவுள் மறுப்பு கூற மாவட்ட செயலாளர் க.இளவரசன் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
முதலில் பெரியார் பெருந் தொண்டர் சைதை எம்.பி.பாலு மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப் பட்டது.
அடுத்ததாக ஆவடி மாவட்ட கழக சார்பில் பொதுக்குழு தீர்மானம் விளக்கம் மற்றும் மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சார கூட்டம் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் முறையே திருநின்றவூர், பூவிருந்தவல்லி பகுதிகளில் தெரு முனைக் கூட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
15-8-2024 தேதியில் பிறந்த நாள் கண்ட மாவட்ட காப்பாளர் பா.தென்னரசு, ஆவடி நகர துணை தலைவர் சி.வச்சிரவேல், மற்றும் அம்பத்தூர் பெரியார் பெருந்தொண்டர் அ.வெ.நடராசன் ஆகியோருக்கு சிறப்பு செய்யப் பட்டது.
17-9-2024 பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு ஆவடி மாவட்டத்தில் உள்ள பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கழக கொடிகளை ஏற்றுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
நிகழ்வில் ஆவடி நகர தலைவர் கோ.முருகன் செயலாளர் தமிழ் மணி, மதுரவாயல் பகுதி தலைவர் சு.வேல்சாமி, வை.கலையரசன், சரவணன், பி.ஆரோக்கியராஜ், மா.பாலாஜி, மாவட்ட பகுத் தறிவாளர் கழக தலைவர் ஜானகிராமன், செயலாளர் க.கார்த்திகேயன், துணை தலைவர் ஜெயராமன், துணை செயலாளர் சுந்தர்ராஜன், பூவிருந்தவல்லி நகர செயலாளர் தி.மணிமாறன், அம்பத்தூர் பகுதி தலைவர் பூ.இராமலிங்கம், திருமுல்லைவாயில் பகுதி தலைவர் இரணியன் (எ) அருள்தாஸ், திருநின்றவூர் நகர தலைவர் அருண்,செயலாளர் கீதா ராமதுரை, பாலசந்திரன், நடராஜன், திருநின்றவூர் நகர இளைஞரணி செயலாளர் மா.சிலம்பரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக ஆவடி நகர கழக துணை தலைவர் சி.வச்சிரவேல் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.