சென்னை, ஆக.21– இந்தியாவின் 2ஆவது பெரும் பணக்காரராக இருக்கும் கவுதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் தொடர்பான சர்ச்சை நாளுக்கு நாள் பெரிதாகி வருகிறது. 2023 ஆம் ஆண்டில் ஹிண்டன்பர்க் வெளியிட்ட முதல் அறிக்கையில் இருந்து சமீபத்தில் வெளியிட்ட SEBI தலைவர் மாதவி புச் மீதான குற்றச்சாட்டுகள் நிறைந்த அறிக்கை வரையில் அதானி குழுமத்தின் முதலீட் டாளர்களைப் பெரிய அளவில் அச்சுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், அதானி குழுமம் தொடர்பான விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை வழக்குரைஞர் விஷால் திவாரி என்பவர் தாக்கல் செய்துள்ளார். ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் புதிய குற்றச்சாட்டுகள் SEBI தலைவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனால் அதானி குழுமம் தொடர்பான விசாரணையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அதானி – ஹிண்டன்பர்க் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு.. அடுத்தது என்ன நடக்கும்..?
ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றம், அதானி குழுமம் முறைகேடாக அதன் பங்கு விலையை உயர்த்தியதும், செபி விதிமுறைகளை மீறி செயல்பட்டது தொடர்பாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையை மய்யப்படுத்தி 24 விசாரணைகளை மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என்று SEBI-க்கு உத்தரவிட்டிருந்தது. அதில் 22 விசாரணைகள் முடிவடைந்துள்ள நிலையில், இரண்டு விசாரணைகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் புதிய குற்றச்சாட்டுகள் காரண மாக, நிலுவையில் உள்ள விசாரணைகளுக்கும் காலக்கெடு விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது. அதானி குழுமம் தொடர்பான விசாரணை முடிவுகள் முதலீட்டாளர்களின் நலனுக்கு முக்கியமானது என்றும், இந்த விவகாரத்தில் முழுமையான தகவல் வெளியிடப்பட வேண்டும் என்றும் வழக்குரைஞர் விஷால் திவாரி தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட் டுள்ள குற்றச்சாட்டுகளில், மாதவி புச் மற்றும் அவரது கணவர், அதானி குழுமத்தின் பண மோசடி தொடர்பான வெளிநாட்டு நிறுவனங்களில் பங்கு வைத்திருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்த பண்ட்-அய் கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி கட்டுப்படுத்தியதாகவும், பங்கு விலையை உயர்த்துவதற்காக இந்த பண்ட் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது என்றும் விஷால் திவாரி தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
ஹிண்டன்பர்க் கிளப்பிய பூதம்.. பங்குச்சந்தையின் நிலைமை என்ன..?!
இந்த விவகாரம் தொடர்பாக SEBI தலைவர் மறுப்பு தெரிவித்திருந்தாலும், இது பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
மாதபி புச் வெளியிட்ட விளக்க அறிக்கைக்குப் பின்பு ஹிண்டன்பர்க் வெளியிட்ட பதிலில், மாதவி புச் மற்றும் அவரது கணவர் பெர்முடா மற்றும் மொரிஷியஸில் உள்ள மறைமுகமான பண்டில் முதலீடு செய்துள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், இந்த நிதியை நிர்வகித்தவர் அவரது கணவரின் சிறு வயது நண்பரும், அதானி குழுமத்தின் உயர் அதிகாரியான அனில் அஹூஜா என்ப தையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
SEBI, அதானி குழுமத்தின் பண மோசடி தொடர்பாக விசாரணையை நடத்தியபோது, மாதவி புச் தனது சொந்த நிதியையும், இந்த மறைமுகமான பண்டில் முதலீடு செய்திருந்தார் என்பது தெரியவந்துள்ளது. இது பெரும் பிரச்சனை என ஹிண்டன்பர்க் தனது பதிலில் தெரிவித்துள்ளது.