ஒன்றிய அரசில் 1324 பணியிடங்கள்

Viduthalai
1 Min Read

அரசியல்

ஒன்றிய அரசில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை எஸ்.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது.

காலியிடம்: ஜூனியர் பிரிவில் சிவில் 1095, எலக்ட்ரிக்கல் மெக்கானிக் 73, எலக்ட்ரிக்கல் 124 உட்பட மொத்தம் 1324 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: தொடர்புடைய பிரிவில் பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.8.2023 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

தேர்வு மய்யம்: சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர்.

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள்: 16.8.2023

விவரங்களுக்கு:ssc.nic.in

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *