புதுக்கோட்டை ஆக 21- புதுக் கோட்டை மாவட்டம் விராலிமலையில் சுயமரியாதை இயக்கம், குடிஅரசு 100ஆம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் விராலிமலை ஒன்றியத் தலைவர் ஓவியர் சி.குழந்தைவேல் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு வந்திருந்தவர்களை மாவட்டத் துணைச் செயலாளர் வெ.ஆசைத்தம்பி வரவேற்றார். மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், மாநில ப.க. அமைப்பாளர் அ.சரவணன், பொதுக்குழு உறுப்பினர் மூ.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில திராவிட மாணவர் கழகச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் துவக்கவுரையாற்றினார். திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் மேலும் பொன்னமராவதி ஒன்றியத் தலைவர் சித.ஆறுமுகம், மாவட்ட ப.க.தலைவர் செ.அ.தர்மசேகர், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ஆ.மனோகரன், மாவட்ட மகளிரணி வீர.வசந்தா, மாணவர் கழக செயலாளர் ஆறு.பாலச்சந்தர், ஒன்றியச் செயலாளர் தி.பொன்மதி, திருச்சி கல்பாக்கம் ராமச்சந்திரன், திமுகவைச் சேர்ந்த விராலிமலை மேற்கு ஒன்றியச் செயலாளர் இளங்குமரன், கிழக்கு ஒன்றியச் செயலாளர் மு.பி.ம.சத்தியசீலன், மத்திய ஒன்றியச் செயலாளர் கே.பி.அய்யப்பன், ம.மு.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மகளிரணியைச் சேர்ந்த ம.புனிதா நன்றி கூறினார்.