21.8.2024
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* ஒன்றிய அரசின் உயர் பதவிகளுக்கு தனியார் நிறுவன அதிகாரிகளை நேரடியாக நியமிக்கும் முறை ரத்து: எதிர்க்கட்சிகள், பாஜக கூட்டணி கட்சிகள் எதிர்ப்புக்குப் பணிந்தது மோடி அரசு.
* சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* இட ஒதுக்கீட்டை எந்த விலை கொடுத்தாவது காப்பாற்றுவோம் – ராகுல் உறுதி.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* அதானி, செபி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஜேபிசி விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தி காங்கிரஸ் இன்று நாடு முழுவதும் 20 செய்தியாளர் சந்திப்புகளை நடத்தவுள்ளது.
தி டெலிகிராப்:
* ’லேட்டரல் என்ட்ரி’க்கு மன்மோகன் சிங் தான் காரணம் என பேசிய ஒன்றிய அமைச்சர்கள், இப்போது யு.பி.எஸ்.சி. ரத்து செய்ததும், மோடிக்கு புகழாரம் சூட்டுகின்றனர். அவர்களின் பாசாங்குத் தனத்திற்கு அளவே இல்லை என கிண்டல் செய்துள்ளார் ஜெய்ராம் ரமேஷ்.
* இடஒதுக்கீட்டிற்கு எதிரானதாக கருதப்படும் என்ற அச்சத்தாலும், பிஜேபி கூட்டாளிகள் இந்த முடிவை எதிர்த்து எதிர்க்கட்சிகளுடன் இணைந்து குரல் கொடுத்த பிறகு முழி பிதுங்கி, லேட்டரல் என்ட்ரி முறையை தற்போது மோடி அரசு ரத்து செய்துள்ளது என்றார் கட்டுரையாளர் ஜே.பி.யாதவ்.
தி ஹிந்து:
* மோடியின் பாஜக அரசு ‘மைனாரிட்டி அரசு’ – ‘விஷம்’ பொருந்தியது, மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்கிறார் மல்லிகார்ஜூனா கார்கே.
– குடந்தை கருணா