பெரம்பலூர், ஆக.21- பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட வடிவேல் மகன் சீனி வாசன் (வயது 42) என்பவர் 19.8.2024 அன்று திருவண்ணாமலை கிரிவலத்திற்குச் சென்று விட்டு, நேற்று (ஆக.20) காலை சின்னசேலம் இருசக்கர வாகன நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சொந்த ஊரான கை.களத்தூருக்குப் புறப்பட்டு வந்து கொண்டி ருந்தார்.
இந்நிலையில் கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டத்திற்குட்பட்ட எஸ்.நறையூரைச் சேர்ந்த கலியன் மகன் மணி என்ப வர் பெருநிலாவில் உள்ள தனது உறவினர் வீட்டின் கிடா வெட்டிற்கு வந்துவிட்டு நேற்று (20.8.2024) காலை சுமார் 6 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் தனது சொந்த ஊருக்கு திரும்பிச் செல்லும்போது எதிர்பாராத விதமாக இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். இந்நிகழ்வில் சீனி வாசன் என்பவர் நிகழ்வி டத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து கை. களத்தூர் காவல் நிலை யத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆன்மீகப் பயணமாக கிரிவலத்திற்குச் சென்று விட்டு வீடு திரும்பிய போது உயிரிழந்த இந்நிகழ்வு அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் மூழ்கச் செய்துள்ளது.
திருவண்ணாமலை கிரிவலம் பக்தர் பரிதாப பலி!
Leave a Comment