தூத்துக்குடி, ஆக.20- தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினரு மான கனிமொழி பல் வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தூத்துக்குடிக்கு வருகைதந்தபோது, அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கொல்கத் தாவில் முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதற்கு நான் கண்டனம் தெரி விக்கவில்லை என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். பெண் மருத்துவர் கொலை நிகழ்வு நடந்த உடனேயே நான் எனது டுவிட்டரில் கண்டனத்தையும், வருத்தத்தையும் பதிவு செய்துள்ளேன். குஷ்புவை முதலில் அதை பார்க்க சொல்லுங்கள். அதன் பிறகு பேச சொல்லுங்கள்” என்று கூறினார்.