சேலம், ஆக. 20- தந்தை பெரியார் அவர்களின் 146 ஆம் ஆண்டு பிறந்த நாள் முன்னிட்டு சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டி 17-8-2024 அன்று தமிழ்ச்சங்கம் க. இராசாராம் அரங்கில் நடத்தியது.
நிகழ்வில் சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வீரமணி இராசு தலைமை ஏற்றிட, மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் ச.சரேஷ்குமார் வரவேற்புரை நல்கிட, திராவிடர் கழக மாநில அமைப்பாளர்கள் கா.நா. பாலு, ஆத்தூர் சுரேஷ், ப.க. மாவட்ட துணைச் செயலாளர் சு.புகழேந்தி, சேலம் மாவட்ட கழக செயலாளர் சி.பூபதி, சேலம் மாநகர தலைவர் இராவண பூபதி, மாநகர செயலாளர் அரங்க.இளவரசன், மேட்டூர் கழக மாவட்ட ப.க. தலைவர் கோவி. அன்புமதி, மாவட்ட செயலாளர் சி.மதியழகன், மேட்டூர் மாவட்ட கழக செயலாளர் ப.கலைவாணன், ஆத்தூர் கழக மாவட்ட ப.க. தலைவர் வ.முருகானந்தம், ஆத்தூர் மாவட்ட தி.க.மாவட்ட செயலாளர் நீ.சேகர், சூரமங்கலம் பகுதி கழக தலைவர் பழ.பரமசிவம், சேலம் மாநகர துணைச் செயலாளர் நூலகர் கலா குமார், ப.க. தோழர் இரா புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் தமிழ்பிரபாகரன், திராவிடர் கழக மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, ப.க. துணைப் பொதுச்செயலாளர் அண்ணா.சரவணன், மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதி, தலைமைக் கழக ப.க. அமைப்பாளர் இரா. மாயக்கண்ணன் ஆகியோர் நடுவர்களாக அமர்ந்தனர்.
தலைமை கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன் நிகழ்வை தொகுத்து இணைப்புரை வழங்கினார்.
அழைப்பு விடுத்த 33 கல்லூரிகளில், 19 கல்லூரிகளிலிருந்து 68 மாணாக்கர்கள் பங்கெடுத்தனர். வந்தவர்களில் 50 பேர் மாணவியர்கள், 18 பேர் மாணவர்கள்.
தந்தை பெரியார்அவர்களின் அயராத தொண்டறத்தினால் கோடான கோடி மக்களின் அறிவுக்கண்களை திறக்க மக்களோடு மக்களாக , அவர்களின் சாமானிய மொழியில் “புளிய மரத்தில் ஆன அடித்தாற் போல்” அடித்தும் , அந்த புளியிலிருந்து கொட்டைகளை எடுக்க இடிப்பது போல் இடித்தும், ஆல் வேர் போல் ஊன்றிப் போயிருந்த மூட நம்பிக்கைகளையும், அறியாமையையும் , தாழ்வு மனப்பான்மையையும் ஒழித்தார் எனவும், உலகத்திலேயே முதன்முதலாக பொது உடைமை அல்லாமல், பொது உரிமைக்காகவும் போராடவும் வைத்தார் எனவும்,
இன்று உலகில் பெண்கள் அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக கோலோச்சுவது, பெண்களை படிக்கச் சொல்லி, அய்யா அவர்கள் வற்புறுத்தி இந்த சமூகத்தின் கண்களை திறந்ததினால் தான் எனவும்,
ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பாக தந்தை பெரியார் அவர்கள் எடுத்துரைத்த கருத்துகள் இன்றும் அழியாமல் நமது வாழ்க்கைக்கு தேவைப் பட்டுக்கொண்டிருப்பதையும் , அய்யா அவர்களின் புரட்சிப் பாதையில் வழி பிறழாமல் 92 வயதிலும் நம் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் நம்மை வழி நடத்துவதினால்தான் ‘பெரியாரால் வாழ்கிறோம் எனவும்,
இன்று இந்த பேச்சுப் போட்டியில் அதிக எண்ணிக்கையில் மாணவியர்கள் பங்கெடுத்துக்கொண்டதே பெரியாரின் முன்னெடும் தொலைநோக்குப் பார்வையால்தானே, அது பெரியார் பிறவாமலிருந்திருந்தால் நடந்திருக்காது. வீட்டிலேயே அய்தாறு குழந்தை குட்டிகளுடன் முடங்கிப் போயிருப்பர் எனவும்,
தந்தை பெரியார் அவர்கள் பள்ளிப்படிப்பை முடிக்காமலேயே,இத்தனை முற்போக்கான கருத்துகளை மின்னல் கீற்றுப் போலவும், இடி இடித்தது போல் முழங்கியதாலுமே, அவை முக்காலத்திற்கும் மாற்ற முடியாதவைகளாகவும் இன்றும் தேவைப்பட்டுக் கொண்டிருப்பது என்பது, அந்த முழக்கங்கள், அந்த வழிப் பாடுகள் அவரின் சுயசிந்தனைகளில் தோன்றியதே எனவும், அரங்கம் அதிர அதிர பறையடித்து முழங்கிய நிகழ்வு மாணாக்கர்கள் எந்த அளவிற்கு தந்தை பெரியார் அவர்களின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள் , அதை ஏற்று,அதன் வழி வாழ்க்கையில் பயணப்பட்டு, பயன் அடைந்திருக்கின்றனர் என்பதை பலப் பல உதாரணங்களால் , கொடுக்கப்பட்ட 3 மணித்துளிகளில் வெளிப்படுத்தியது,எதிர்கால சிங்கங்களை காலத்திற்கும் நிமிர , நெஞ்சுயர்த்த வழி கோலியது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கியது.
68 மாணாக்கர்களில்
“என்றும் தேவை பெரியார்” எனும் தலைப்பில் 15 பேரும்
“புரட்சியாளர் பெரியார்” எனும் தலைப்பில் 15 பேரும்
“பெரியார் பிறவாமல் இருந்தால்” எனும் தலைப்பில் 15 பேரும்
“பெரியாரால் வாழ்கிறோம்” எனும் தலைப்பில் 7 பேரும்
“சுய சிந்தனையாளர் பெரியார்” எனும் தலைப்பில் 6 பேரும்
“பெரியார் காண விரும்பும் சமுதாயம்” எனும் தலைப்பில் 5 பேரும்
“பெரியார் ஒரு கேள்விக்குறி? ஆச்சரிய குறி!” எனும் தலைப்பில் மூவரும்
“மண்டை சுரப்பை உலகு தொழும்” எனும் தலைப்பில் இருவரும்
கருத்துகளை பூக்கள் தொடுப்பது போல் தொடுத்தார்கள்.
அய்ந்து நடுவர்களும் மாணாக்கர்கள் அனைவரையும் வாழ்த்தியும், பேச்சின் நிறை, குறைகளை ஒவ்வொரு நடுவரும் தமக்கே உரிய முறைகளில் எடுத்து விளக்கியும் தெளிவு படுத்தினர்.
ஊமை ஜெயராமன் வந்திருந்த மாணாக்கர்களின் பெற்றோர் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்களுக்கு பயனாடை அணிவித்து பெருமை படுத்தினார். அனைத்து மாணாக்கர்களுக்கும் தம் கைப்பட எழுதிய சான்றிதழ்களை வழங்கி வாழ்த்திப் பேசினார்.
போட்டி மிகவும் கடுமையாக இருந்த காரணத்தினால்
நடுவர்கள் ஒன்றாம் நிலை முதல் பத்தாம் நிலை வரை மாணாக்கர்களை தேர்ந்தெடுத்து அறிவித்தனர்.
அவர்களில்
முதல் பரிசு: சு.வி.சிறீலேகா
“என்றும் தேவை பெரியார்”
இரண்டாம் ஆண்டு BE(ECE) சோனா காலேஜ் ஆப் டெக்லனாஜி, சேலம்.
இரண்டாம் பரிசு: ப.காயத்ரி
“சுய சிந்தனையாளர் பெரியார்”
முதல் ஆண்டு முதுகலை கணிதம். சிறீ சாரதா மகளிர் (தன்னாட்சி)கல்லூரி, சேலம்.
மூன்றாம் பரிசு: ம.இராஜசிறீ
“பெரியார் காண விரும்பும் சமுதாயம்”
இரண்டாம் ஆண்டு BE(ECE)அரசு பொறியியல் கல்லூரி , சேலம்.
ஆறுதல் பரிசுகள்
நான்காம் நிலை: ம. சுபாஷ்
“பெரியார் ஒரு கேள்விக் குறி? ஆச்சரிய குறி!”
இரண்டாம் ஆண்டு முதுகலை நுண்ணுயிரியல், வைஷ்யா கல்லூரி , சேலம்.
அய்ந்தாம் நிலை: கோ. சொர்ணப்பிரியா
“பெரியார் காண விரும்பிய சமுதாயம்”
இரண்டாம் ஆண்டு முதுகலை தமிழ்,பத்மவாணி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, சேலம்.
ஆறாம் நிலை: கா.பிரேமா
“புரட்சியாளர் பெரியார்”
நான்காம் ஆண்டு BE(ECE) ஏ. வி. எஸ். காலேஜ் ஆப் டெக்னாலஜி, சேலம்.
ஏழாம் நிலை: ச.இந்துமதி
“பெரியார் பிறவாமல் இருந்திருந்தால்”
மூன்றாம் ஆண்டு இளங்கலை நுண்ணுயிரியல்,
சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி, சேலம்
எட்டாம் நிலை: நா. பொன்மணி
முதலாம் ஆண்டு இளங்கலை இரசாயணம், சவுடேஸ்வரி மகளிர் கல்லூரி, சேலம்.
ஒன்பதாம் நிலை: ஷா.ஷப்ரின் பானு
“பெரியார் பிறவாமல் இருந்திருந்தால்”
மூன்றாம் ஆண்டு இளங்கலை வணிகவியல், அரசு மகளிர் கலைக் கல்லூரி, சேலம் – 8
பத்தாம் நிலை: ச. முஹம்மது ரித்திக்
“பெரியார் பிறவாமல் இருந்திருந்தால்”
அய்ந்தாம் ஆண்டு இளங்கலை வழக்கியல்
சென்ட்ரல் சட்டக் கல்லூரி, சேலம்.
போட்டியில் வெண்றவர்களுக்கு
முதல் பரிசு-3000/-
இரண்டாம் பரிசு-2000/-
மூன்றாம் பரிசு-1000/-
நான்கு – பத்து நிலை ஆறுதல் பரிசு 500/- வழங்கப்பட்டது.
முதல் மூன்று பரிசு பெற்றவர்களுக்கு ப.க. தோழர் மதிவாணன் செல்வராஜ் அவர்கள் கதிரவன் கிருஷ்ணமூர்த்தி (பாஸ்டன்) எழுதிய “மைன்டுபுல் திருக்குறள் “என்னும் நூலை பரிசாக வழங்கினார்.
மூன்றாம் பரிசு ரூ. 1000-அய் சேலம் மாவட்ட கழக செயலாளர் சி.பூபதியும், பொதுக் குழு உறுப்பினர் க.கமலம் அவர்களும் இணைந்து வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் சேலம் மாவட்ட கழக தலைவர் அ.ச. இளவழகன், பொதுக்குழு உறுப்பினர் விடுதலை சந்திரன், ப.க. தோழர்கள் எல். அடி. தங்கராஜ், தனசேகர், இ.பாலு, சம்பூரணி, தமிழ் தென்றல் , விக்னேஷ், செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.