பெரியார் திடல் பணிகளில் பயிலகம், வெளியீட்டுப் பிரிவு, ‘விடுதலை’ பணிமனை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றி வருப வரும், ஆவடி மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவருமான தோழர் வை.கலையரசன் அவர்களின் தந்தையார் பெ.வைத்தியலிங்கம் (வயது 87) அவர்கள் இன்று (10.8.2023) அதிகாலை அரியலூர் மாவட்ட உல்லியக் குடியில் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.
தோழர் கலையரசன் முழுமையாக இயக்கத் தொண் டுக்குத் தன்னை ஒப்படைத்துக் கொள்ள இடையூறின்றி அனுமதித்த அவர்தம் தந்தையாரும், குடும்பத்தினரும் நமது நன்றிக்கும், பாராட்டுக்கும் உரியவர்கள்.
தந்தையாரை இழந்துவாடும் கலையரசன் – அவரது குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
10.08.2023
சென்னை
(குறிப்பு: அவரது இறுதி நிகழ்வு அரியலூர் மாவட்டம் உல்லியக்குடியில் இன்று மாலை 3 மணியளவில் நடைபெறுகிறது. தொடர்புக்கு: 9843207493).