புதிய ஹை டோஸ் ரேட் பிராகிதெரபி சிஸ்டம் ஃபிளெக்ஸிட்ரான் (High Dose Rate Brachytherapy System Flexitron) கருவி மூலம், புற்றுநோய்க்கான வலுவான, துல்லியமான சிகிச்சை அளிக்கும் பிரிவை டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை திறந்துள்ளது.
பிராகிதெரபி என்பது கதிரியக்க சிகிச்சையின் ஒரு வடிவமாகும். இதில் கதிரியக்கம் செலுத்தும் ஆதாரமானது, பொருத்தமான பயன்பாடு மூலம் கட்டியின் உள்ளேயோ / அருகிலோ வைக்கப்படுகிறது. புற்றுக்கட்டியானது அதிகபட்ச கதிரியக்கத்தைப் பெறவும், சுற்றியுள்ள சாதாரண திசுக்கள் இருக்கும் பகுதிகளில் கதிரியக்க டோஸ் விரைவாக வீழ்ச்சியடையவும் இந்தக் கருவி உதவுகிறது.
இந்த சிகிச்சை முறை வெளிப்புற பீம் கதிரியக்க சிகிச்சையுடன் சேர்த்தோ அல்லது குறிப்பிட்ட புற்றுநோய் வகை களுக்கு முழுமையான சிகிச்சை யாகவோ பயன்படுத்தப்படலாம். நாக்கு, மூச்சுக்குழாய், உணவுக்குழாய், மென்மை யான திசுக்கள், பூகல் மியூகோசா, மார்பகம், புரோஸ்டேட் போன்ற பல புற்றுநோய் வகைகளை நிர்வகிப்பதில் பிராகிதெரபி முக்கிய பங்கு வகிக்கிறது. அதேநேரம், கர்ப்பப்பை வாய் மற்றும் எண்டோமெட்ரியம் புற்றுநோய்களுக்கு பிராகிதெரபி ஒரு திட்டவட்டமான சிகிச்சை முறை ஆகும்.
ஃபிளெக்ஸிட்ரான் பிராகிதெரபி சிஸ்டம், Ir-192 கதிரியக்க ஆதார அடிப் படையிலான ஹை டோஸ் அமைப்பாகும். இது குறுகிய காலத்தில் சிகிச்சையை வழங்குகிறது. நோயாளிகளுக்கு பாதுகாப்பான மற்றும் துல்லியமான சிகிச்சையை வழங்க இந்த அமைப்பு உதவுகிறது என இம்மருத்துவமனையின் தலைவர் டாக்டர் டி.ஜி.கோவிந்தராஜன் தெரிவித்துள்ளார்.