பிஜேபி ஆட்சியில் பாலங்கள் இடிந்து விழும் படலங்கள் தொடர்கின்றன

2 Min Read

பாட்னா, ஆக. 19- பீகாரில் கங்கை ஆற்றில் மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்தது. கடந்த 2 மாதத்தில் மொத்தம் 15 பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்துள்ளன.
பீகார் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடுத் தடுத்து புதிய மற்றும் பழைய பாலங்கள் இடிந்து விழும் நிகழ்வுகள் நடைபெற்றன.
பாலம் இடிந்து விழும் காட்சிப் பதிவு, ஒளிப்படங்கள் சமூக வலை தளங்களில் வெளியாவதை யடுத்து பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.

மக்கள் அதிர்ச்சி
இந்த நிலையில், 17.8.2024 அன்று மற்றொரு பாலமும் சேத மடைந்தது. கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டு வரும் பாலத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. பொதுமக்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் பீகாரில் இடிந்து விழும் 15ஆவது பாலம் இதுவாகும். அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து விழுவதால் மக்கள் அதிர்ச்சி யடைந்துள்ளனர்.
இடைநீக்கம்
ஏற்கெனவே பாலம் இடிந்து விழும் நிகழ்வுகள் தொடர்பாக நீர்வளத்துறை மற்றும் ஊரக பணித்துறையை சேர்ந்த 16 பொறியாளர்களை மாநில அரசு பணியிடை நீக்கம் செய்து விசாரணை நடத்தி வருகிறது.

முந்தைய நிகழ்வுகள் வருமாறு
* ஜூன் 19ஆம் தேதியன்று அராரியா மாவட்டத்தின் பகாரா நதியின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது.
* ஜூன் 22ஆம் தேதியன்று சிவான் மாவட்டத்தில் காங்டாக் கால்வாய் குறுக்கே கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது.
* ஜூன்23ஆம் தேதியன்று கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள சிறு பாலம் இடிந்து விழுந்தது.
* ஜூன் 26ஆம் தேதி கிஷண்கஞ்ச் மாவட்டத்தில் கங்கை நதியை மஹாநந்தா நதியுடன் இணைக்கும் துணை நதியான மடியாவின் குறுக்கே, 70 மீட்டர் நீளத்துக்கு அமைந்துள்ள பாலம் இடிந்து விழுந்தது.
* ஜூன் 28ஆம் தேதி மதுபானி மாவட்டத்தில் உள்ள ஒரு பாலம் இடிந்து விழுந்தது.
* ஜூலை 3ஆம் தேதி சரண் மாவட்டத்தில் இரண்டு பாலங்கள் இடிந்து விழுந்தன.
* ஜூலை 4ஆம் தேதி கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் இரண்டு பாலங்கள் இடிந்து விழுந்தன.
* ஜூலை 10ஆம் தேதி சஹர்சா மாவட்டத்தில் உள்ள மஹிசி கிராமத்தில் ஒரு பாலம் இடிந்து விழுந்தது.
* ஆகஸ்ட் 9ஆம் தேதி கதிஹார் மாவட்டத்தில் உள்ள பாலம் ஒன்று இடிந்து விழுந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *