சென்னை ஆக.10 தமிழ்நாடு தேர்வுத்துறை வெளி யிட்டுள்ளஅறிக்கை: விடைத்தாள் நகல்கள் தேர்வுத் துறையின் இணைய தளமான www.dge.tn.gov.in என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மறுகூட்டல்-2 அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மேற்கண்ட இணையதளத்தில் இருந்து அதற்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை அந்தந்த மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திலும், புதியதாக தொடங்கப்பட்ட மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களிலும் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அல்லது முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும்.
மறு மதிப்பீடு செய்ய ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.505, மறுகூட்டல் -2 செய்ய உயிரியல் பாடத்துக்கு மட்டும் ரூ.305, பிற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும்.