பட்டியல், பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை புறக்கணிக்கும் யுபிஎஸ்சி தி.மு.க. எம்.பி. வில்சன் குற்றச்சாட்டு!

3 Min Read

சென்னை, ஆக.19- பட்டியல், பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை புறக்கணிக்கும் யுபிஎஸ்சி: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது;
“ஆட்சேர்ப்பு செயல்முறையில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்ற அரசியல் சாசன உத்தரவை யு.பி.எஸ்.சி., எப்படி புறக்கணித்துள்ளது என்பதற்கு யு.பி.எஸ்.சி., இன்று வெளியிட்டுள்ள பின்வரும் விளம்பரம் ஒரு சிறந்த உதாரணமாகும்..
பதவிகளுக்கான எந்த இட ஒதுக்கீடும் வழங்காமல், 10 இணை செயலாளர் பதவிகள், 35 இயக்குநர் / துணை செயலாளர் பதவிகள் என மொத்தம் 45 பணியிடங்களுக்கான அறிவிப்புகளை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
இதில் வேடிக்கை என்னவென்றால், ஒன்றிய அரசு ஊழியர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது!
சாதாரணமாக இதுபோன்ற விளம்பரங்கள் வெளியிடும்போது, மொத்தமுள்ள 45 இணைச் செயலாளர் மற்றும் இயக்குநர் / துணை செயலாளர் பதவிகளில் குறைந்தது 22-23 விண்ணப்பதாரர்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் எஸ்சி / எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இது அரசியல் சாசனத்தை மீறும் செயல் இல்லையா?
பிரதமர் அவர்களே, நீங்கள் இந்த சட்டவிரோதமான, இடஒதுக்கீட்டுக்கு எதிரான ஆட்சேர்ப்பு செயல்முறையை தொடரப் போகிறீர்களா அல்லது அரசியல் சட்ட இடஒதுக்கீட்டு முறையை செயல்படுத்தி புதிய நியமனத்திற்கு அழைப்பு விடுக்கப் போகிறீர்களா?” என தெரிவித்துள்ளார்.

யுஜிசி நெட்:
தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு வெளியீடு!
அய்தராபாத், ஆக. 19- யுஜிசி நெட் தோ்வுகள் 21.8.2024 அன்று முதல் நடைபெறவுள்ள நிலையில் முதல் மூன்று தோ்வுகளுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டை தேசிய தோ்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சிப் படிப்புக்கான ஒன்றிய அரசின் உதவித்தொகை பெறவும், பிஎச்டி மாணவா் சோ்க்கைக்கும் நெட் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும். தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்தத் தோ்வு ஆண்டுக்கு இரண்டு முறை (ஜூன் மற்றும் டிசம்பா்) நடத்தப்படும்.
அதன்படி, நிகழாண்டு ஜூன் பருவத்துக்கான முதல்கட்ட நெட் தோ்வு நாடு முழுவதும் 1,205 மய்யங்களில் 19.6.2024 அன்று நடத்தப்பட்டது. இந்தத் தோ்வை 9 லட்சத்து 8,580 பட்டதாரிகள் எழுதினா்.
இந்நிலையில், நெட் தோ்வில் முறைகேடுகள் நடைபெற்றதாகத் தகவல்கள் வந்தன. அதையடுத்து, யுஜிசி நெட் தகுதித் தோ்வை ஒன்றிய கல்வி அமைச்சகம் ரத்து செய்தது. அதற்கான மறுதோ்வு ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பா் 4-ஆம் தேதி வரை கணினி வழியில் நடத்தப்படும் எனவும் என்டிஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதவிர மொத்தமுள்ள 83 பாடங்களுக்கும் எந்தெந்த நாள்களில் தோ்வு நடத்தப்படும் என்ற விரிவான கால அட்டவணையும் வெளியிடப்பட்டது.
தோ்வெழுத உள்ள பட்டதாரிகளுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. அவற்றை இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முதல்கட்டமாக ஆகஸ்ட் 21 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 3 தோ்வுகளுக்கான அனுமதிச் சீட்டு மட்டும் வெளியிடப்பட்டுள்ளன. எஞ்சிய தோ்வுகளுக்கான அனுமதிச் சீட்டுகள் அடுத்தடுத்து வெளியிடப்படும். கூடுதல் விவரங்கள் வலைதளத்தில் விரைவில் வெளியிடப்படும்.
இதுகுறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000 எனும் உதவி மய்ய எண் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் முகவரி வழியாகவோ தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *