சென்னை, ஆக.19- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னை மின்சார ரயிலை கையகப்படுத்துவதில் இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில்..
தென்னக ரயில்வே இதில் விருப்பத் துடன் இருந்தாலும் ஒன்றிய ரயில்வே அமைச்சகம் இதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் MRTS அய் கையகப்படுத்துவது இறுதி கட்டத்தை அடைந்து உள்ளது.
இதற்கான முன்மொழிவு ரயில்வே வாரியத்தின் கொள்கை ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதை ஒன்றிய ரயில்வே அமைச்சகம் ஏற்றுக் கொள்ளவில்லையாம். இதை ஒன்றிய ரயில்வே அமைச்சகம் ஏற்றுக் கொண்டால், ஸ்டேஷன் மறு வடிவமைப்பு, புதிய ரோலிங் ஸ்டாக் போன்ற பல மாற்றங்கள் இதன் மூலம் மேற்கொள்ளப்படும்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இன்னும் சில மாதங்கள் மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டத்தை (எம்ஆர்டிஎஸ்) கையகப்படுத்தும். அதாவது பறக்கும் ரயில் நிலையத்தை கையகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இதில் ஒன்றிய அரசு ஆர்வம் காட்டாதது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. முதல் நடவடிக்கையாக, பறக்கும் ரயில் நிலையங்களை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை ஆராய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) மல்டி மாடல் ஹப்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதால், 2025 ஆம் ஆண்டில் கட்டம்-2 மெட்ரோ ரயில்கள் இயங்கத் தொடங்கும் போது பயணிகள் மிக எளிதாக பயணம் செய்ய முடியும்.பயணிகள் மெட்ரோ ரயில்களில் இருந்து MTC பேருந்துகள், புறநகர் மற்றும் MRTS ரயில்கள் அல்லது மெட்ரோ ரயில் கட்டம்-1 வழித்தடங்களுக்கு தடையின்றி நொடிகளில் மாறலாம் . 23 இடங்களில் இந்த வசதி வர உள்ளது.
மல்டி மாடல் திட்டங்கள்: பன்னாட்டு நாடுகளில் மட்டும் உள்ள இந்த வசதி சென்னையில் கொண்டு வரப்பட உள்ளது. இந்த மய்யங்கள் 116.1 கிமீ கட்டம்-2 நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் 2025 முதல் 2028 வரை இந்த மெட்ரோ பணிகள் நடக்கும்.
திருவான்மியூர் மற்றும் திருமயிலையில் மெட்ரோ ரயில் நிலையங்கள் எம்ஆர்டிஎஸ் நிலையங்களுடனும், மந்தவெளி மற்றும் மாதவரத்தில் மெட்ரோ ரயில் நிலையங்கள் பேருந்து நிலையங்களுடனும் இணைக்கப்படும். மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான 45.4 கிமீ மெட்ரோவில் இது போல ஒன்பது மையங்கள் அமைக்கப் படும்.
கலங்கரை விளக்கம் முதல் பூந்த மல்லி பைபாஸ் வரையிலான 26.1 கிமீ மெட்ரோ-4இல், கோடம்பாக்கம், அய்யப்பன் தாங்கல், பூந்தமல்லி பேருந்து நிலையம், நந்தனம் மற்றும் வடபழனி ஆகிய அய்ந்து மய்யங்கள் அமைக்கப்படும். 44.6 கிமீ மெட்ரோ-5இல், மாதவரம் பேருந்து நிலையம், வில்லிவாக்கம் பேருந்து நிலையம், அண்ணாநகர், கோயம்பேடு, ஆலந்தூர், செயின்ட் தோ வில்லிவாக்கம் வாணுவம்பேட்டை, கீழ்கட்டளை ஆகிய இடங்களில் ஒன்பது மய்யங்கள் அமைக்கப்படும்.
சென்னை மெட்ரோ ரயில்நிறுவனம் இன்னும் சில மாதங்கள் மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டத்தை (எம்ஆர்டிஎஸ்) கையகப்படுத்தும். அதாவது பறக்கும் ரயில் நிலையத்தை கையகப்படுத்தும். முதல் நடவடிக்கையாக, பறக்கும் ரயில் நிலையங்களை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை ஆராய்வதற்கான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) அதிகாரிகளின் கூற்றுப்படி, எம்ஆர்டிஎஸ் நிலையங்களை எவ்வாறு மேம்படுத்தலாம் மற்றும் என்னென்ன வசதிகளைச் சேர்க்க வேண்டும் என்பதை அறியும் முயற்சியில் அவர்கள் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர். அனுமதி கிடைத்ததும், ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்.
திருமயிலை மற்றும் திருவல்லிக்கேணி ஆகிய இரண்டு நிலையங்களை ஆய்வு செய்தோம், மேலும் அந்த நிலையங்களை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து ஆய்வு செய்து மதிப்பீட்டை வழங்கும் நிறுவனத்தை நியமிக்க திட்டமிட்டுள்ளோம்.
நாங்கள் தனியார் ஏஜென்சிக்கு வழிகாட்டுதல்களை வழங்கிய பிறகு, ஒவ்வொரு நிலையத்தையும் எவ்வாறு சிறப்பாக உருவாக்குவது என்பதை அவர்கள் வரைவார்கள். விளக்குகள் முதல் பாதுகாப்பு வரை பயணிகள் வசதிகள் வரை அனைத்தும் மாறும். இந்த நிலையங்களை சிஎம்ஆர்எல் தரநிலைக்கு கொண்டு வருவதே யோசனை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ரயில் சேவையை மெட்ரோ நிர்வாகம் கையகப்படுத்தல் நீண்ட செயல்முறையாக இருக்கும், ஆரம்பத்தில், ரயில்வே தொடர்ந்து ஒரு ஆண்டுக்கு ரயில்களை இயக்கும் . ஏனென்றால், சிஎம்ஆர்எல் இதை கையகப்படுத்திய பிறகு, நிலையத்தை மேம்படுத்தும் பணியே குறைந்தது ஒரு ஆண்டாவது நடக்கும்.