டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை புறக்கணிக்கும் யுபிஎஸ்சி: லேட்டரல் என்ட்ரி மூலம் அரசு உயர் பதவிகளுக்கு ஆட்தேர்வு நடத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* அய்.ஏ.எஸ். பதவிகளை தனியார் மயமாக்கி, இட ஒதுக்கீட்டை முற்றிலும் ஒழிப்பது தான் ‘மோடியின் காரண்டி’ என ராகுல் கடும் கண்டனம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* இந்தியாவின் தேசிய ஆளுமை கலைஞர். தமிழ்நாடு மேனாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மறைந்த கலைஞரின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் நினைவு நாணயத்தை வெளியிட்டு ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம்.
தி இந்து:
* யு.பி.எஸ்.சி. ஆட்சேர்ப்பில் பக்கவாட்டு நுழைவுக்கு எதிராக நாடு தழுவிய இயக்கத்திற்கு அகிலேஷ் அழைப்பு; இந்த தேர்வு முறை இன்றைய அதிகாரிகள் மற்றும் இளைஞர்கள் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் உயர் பதவிகளை அடைவதற்கான கதவுகளை மூடும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் குற்றச்சாட்டு.
– குடந்தை கருணா