உங்களுக்கு தனி உடைமையா? பொது உடைமையா? என்பது பற்றிக்கூட எனக்குக் கவலையில்லை. மானத்தைக் கவனித்துக் கொண்டு உடைமையைப் பற்றி கவனிக்கலாம். ஏன்? முதலில் மனிதன் மனிதனாக வேண்டுமே; இரண்டாவது அவனுக்கு அறிவு வர வேண்டும். கண்டதுக்கெல்லாம் குனிந்து கும்பிடு போடும் தன்மையும், கண்டதை – கேட்டதை எல்லாம் கண்மூடித்தனமாக நம்பிவிடும் தன்மையும், தண்டவாளத்தின் மீது ரயில் ஓடினால் அதுவும் ஓர் பகவான் அவதாரமே? என்று நினைத்து அதற்குத் தேங்காய், பழம் ‘நிவேதனம்’ செய்வது போன்ற தன்மையும் மக்களை விட்டகல வேண்டாமா? நம்மைத் தாழ்வுபடுத்துவது எதுவும் நம் முன் நிற்கலாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’