அம்மாப்பேட்டை, ஆக. 19- தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் 16-8-2024 வெள்ளி மாலை 6.30 மணி யளவில் சாலியமங்கலம் சில்வர் மகாலில் நடைபெற்றது. மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் ஜெ..பெரியார்கண்ணன் கடவுள் மறுப்பு கூறினார் சாலிய மங்கலம் நகரத் தலைவர் துரை.அண்ணாதுரை அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்
அம்மாபேட்டை ஒன்றிய கழகத் தலைவர் கி.ஜவகர் நிகழ்வுக்கு தலைமை ஏற்று உரையாற்றினார். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் தொடக்க உரையாற்றினார். பகுத்தறிவாளர்கழக மாநில அமைப்பாளர் கோபு.பழனிவேல், ஒன்றிய துணைச் செயலாளர் ராஜேந்திரன் ஒன்றிய துணைத் தலைவர் சூழியக் கோட்டை சொ.உத்தராபதி பகுத்தறி வாளர் கழக ஒன்றிய தலைவர் சாமிநாதன், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் துரை.தம்பிதுரை, விடுதலை உணவகம் அறிவழகன், சாலியமங்கலம் முருகேசன், ஜ. பாலசிங்கம், அருள்மொழிவர்மன், நித்திலன், தம்பி.பிரபாகரன் தஞ்சை மாநகர இணை செயலாளர் இரா.வீரக்குமார், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பாவலர் பொன்னரசு மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ச. அழகிரி, மாவட்ட கழக செயலாளர் வழக்குரைஞர் அ.அருணகிரி, தஞ்சை மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் உரை யாற்றினர்.
சாலியமங்கலம் நகர செயலாளர் மா.சுடரொளி நன்றி கூறினார்.
கூட்டத்தில், சுயமரியாதைச் சுடரொளிகள் மேனாள் ஒன்றிய செயலாளர் தென் கொண்ட இருப்பு காத்தையன், அருள் மொழி, பேட்டை பெரியார் கண்ணன் அவர்களின் தாயார் ஆகியோர் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலும் வீர வணக்கமும் தெரிவிக்கப்பட்டது.
4-8-2024 அன்று கும்பகோணத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்று செயல்படுத்து எனவும், தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்தநாள் விழாவினை எழுச்சியோடு கொண்டாடிடும் வகையில் 17-9-2024 அன்று அம்மா பேட்டை ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் பெரியார் சிலை மற்றும் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்குவது இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று கிளைகள் தோறும் கழகக் கொடியேற்றி எழுச்சியுடன் கொண்டாடுவது, அன்று மாலை சாலியமங்கலத்தில் கழக பொதுக் கூட்டத்தை எழுச்சியுடன் எனவும், தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் 26-8-2024 தஞ்சை பாரத் கல்லூரியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுபோட்டியில் பெருவாரியான மாணவர்களை பங்கேற்க செய்வது எனவும், அம்மாபேட்டை ஒன்றியத் தில் உள்ள அனைத்து கிளைக் கழகங்களிலும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா தெருமுனை கூட்டங்களை தொடர்ந்து நடத்துவது எனவும், தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 22-09-2024 ஞாயிறு அன்று தஞ்சாவூர் மாநகரில் நடைபெறும் பெரியார் பட ஊர்வலத்திலும் மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பெரும் திரளாக பங்கேற்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
புதிய பொறுப்பாளர்கள்
அம்மாபேட்டை ஒன்றிய இளைஞர் அணி தலைவர் ஜ.பாலசிங்கம், ஒன்றிய இளைஞரணி செயலாளர் மு.இராசசிம்மத்துரை, அம்மாபேட்டை ஒன்றிய திராவிட மாணவர் கழக ஒன்றிய தலைவர் தம்பி.பிரபாகரன், திராவிட மாணவர் கழக ஒன்றிய செயலாளர் சு.அருள்மொழிவர்மன், திராவிட மாணவர் கழக ஒன்றிய அமைப்பாளர் வீ.நித்திலன்.