27.11.2023
டெக்கான் கிரானிக்கல்,சென்னை
* கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி.
* 2024 பொதுத்தேர்தல் பணிகளில் அமைச்சர் உதய நிதிக்கு முக்கிய பொறுப்பு தர திமுக முடிவு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
* சட்டமன்றம் நிறைவேற்றும் மசோதாக்கள் குறித்து முடிவெடுக்க கால வரம்பை ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் வரையறை செய்து உத்தரவிட வேண்டும், என்கிறது தலையங்க செய்தி.
* பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை ஒன்றிய அரசு தர வலியுறுத்தி மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்திட நிதிஷ் குமார் முடிவு.
* நீதிபதிகளில் பன்முகத் தன்மை இடம் பெற அகில இந்திய நீதித்துறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்கிறார் குடியரசுத் தலைவர் முர்மு.
* காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன், தேர்தல் அறிக்கையில் கூறியபடி விவசாயிகள் நலன் உள்ளிட்ட ஆறு வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் – தெலங்கானா தேர்தல் பரப்புரையில் ராகுல் பேச்சு.
தி டெலிகிராப்
* மத்தியிலும் மாநிலத்திலும் பாஜகவை வெளியேற்ற பழங்குடியினர், தாழ்த்தப்பட்டவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அழைப்பு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
* நவம்பர் 23, 2023 அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள சுஜாங்கஞ்ச் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தில் தலித் சிறுவன் தாக்கப்பட்டு, சிறுநீர் குடிக்க வற்புறுத்தப்பட்டு, அவனது புருவங்கள் ஜாதிவெறியர்களால் மொட்டை யடிக்கப்பட்டுள்ளது.
– குடந்தை கருணா