சென்னை, ஆக.18- கொளத்தூரில் ரூ.53½ கோடியில் வண்ண மீன்கள் சந்தை அமைய உள்ள இடத்தை அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஆய்வு
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னை வில்லிவாக்கம் சிவசக்தி காலனிபாடி மேம்பாலத்தின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் சார்பில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் ரூ.53கோடியே 50 லட்சம் மதிப்பில் உலகத் தரம் வாய்ந்த கொளத்தூர் வண்ண மீன்கள் சந்தை அமைக்கப்பட உள்ளது.
இதற்கான இடத்தை மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சி குழும தலைவருமான பி.கே.சேகர் பாபு ஆகியோர் 16.8.2024 அன்று நேரில் சென்று பார்வையிட்டு, கள ஆய்வு செய்தனர்.
மீன்கள் உற்பத்தி
இதையடுத்து அனிதா ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில் கூறியதாவது:- மேற்கு வங்காளத்துக்கு அடுத்தப் படியாக தமிழ்நாட்டில் கொளத்தூரில் ஏறக்கு றைய 250 வண்ண மீன் வகை களை உற்பத்தி செய்து பல்வேறு இடங்களுக்கு விற்பனை செய்கிறார்கள்.
இதில், ஏறக்குறைய 2 ஆயிரத்து 500 முதல் 3 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபடுகிறார்கள். முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வண்ண மீன்கள் உற்பத்தியை தமிழ்நாட்டின் முதன்மை தொழிலாக மாற்ற வேண்டும் என்ற வகையில் சட்டமன்ற பேரவையில் அறிவித்தார்.
அந்த அறிவிப்பின்படி, ஏறக்குறைய 4 ஏக்கர் நிலப்பரப்பில் உலகத் தரத்தில் வண்ண மீன்கள் விற்பனை செய்கிற வகை யிலும், அங்காடியை பல்வேறு தரப்பட்ட மக்கள் அதிகளவில் பார்க்க வேண்டும் என்ற வகையிலும் ரூ.53 கோடியே 50 லட்சத்தில் தரைதளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டட மானது அமைய உள்ளது. இதற்கான பணிகளை வெகுவிரைவில் தொடங்க வழிவகை செய்வதற்காக ஆய்வு மேற்கொண்டோம்.
-இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, வில்லிவாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப் பினர் வெற்றிஅழகன், தமிழ் நாடு சேமிப்பு கிடங்கு வாரிய தலைவர் ப.ரங்கநாதன். சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
ரூ. 53 கோடியில் கொளத்தூரில் வண்ண மீன்கள் சந்தை
Leave a Comment