மீண்டும் நிலவில் கால்பதிக்க திட்ட மிட்டுள்ளது அமெரிக்கா. அதன் விண்வெளி அமைப்பான ‘நாசா’ வரும் 2024இல், நிலவில் அதிக காலம் தங்கி ஆராய்வதற்காக மனிதர்களை அனுப்பவிருக்கிறது.
இதற்கென விண்கலன், குடியிருப்புக்கான கருவிகள் போன்றவற்றை உருவாக்குவதில் நாசா மும்முரமாகியிருக்கிறது. ஆனால், விண் வெளி வீரர்களுக்கு தேவையான பாதுகாப்பு உடைகளை தயாரிப்பதில்தான் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இதில் தனியாரின் உதவியை நாட ஏற்கெனவே நாசா தீர்மானித்திருந்தது. ஆனால், விலைவாசி உயர்வு மற்றும் உலகப் பெருந்தொற்று ஆகியவை தனியார் பங்களிப்புக்கு குறுக்கே நின்று கொண்டு உள்ளன.
இந்த நிலையில், ஸ்பேஸ் எக்சின் அதிபர் எலான் மஸ்க், தன்னால் சிறந்த விண்வெளி உடைகளை தயாரித்து தர முடியும் என, நாசாவுக்கு ‘டுவிட்டர்’ மூலம் சேதி அனுப்பியுள்ளார்.
ஏற்கெனவே நாசாவின் வீரர்களை, தனது ஸ்பேஸ் எக்ஸ் கலன்கள் மூலம் விண் வெளிக்கு அனுப்பி, திரும்பவும் பூமிக்கு அழைத்து வந்தவர் தான் மஸ்க்.அந்த பயணங்களில் பங்கேற்ற விண்வெளி வீரர்கள் எல்லாம், அவரது நிறுவனம் உருவாக்கிய கறுப்பு வெள்ளை உடையைத்தான் அணிந் தனர்.
என்றாலும், விண்வெளியில் மிதந்தபடி பராமரிப்பு வேலைகள் செய்வது, நிலவில் தங்கியிருப்பது போன்றவற்றுக்கு மஸ்கின் பழைய உடைகள் போதாது.எனவே தான், புதுவித உடைகளை தன்னால் 2024 நிலா திட்டத்திற்கு தயாரித்துவிட முடியும் என மஸ்க் தெரிவித்துள்ளார்.
அது சரி, இன்றைய விலைவாசியில், நிலவுக்கு செல்லும் வீரர் – வீராங்கனையருக்கு உடையை உருவாக்க ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு செலவு எவ்வளவு தெரியுமா? ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள்!