ஜம்மு-காஷ்மீருக்கு 3 கட்டங்களாக தேர்தல் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

1 Min Read

சிறீநகர், ஆக.17 ஜம்மு – காஷ்மீருக்கு மூன்று கட்டங்களாக பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதிகளில் ஜம்மு – காஷ்மீருக்கு தேர்தல் நடைபெற விருக்கிறது. அக்டோபர் 4ஆம் தேதி ஜம்மு – காஷ்மீரில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஜம்மு – காஷ்மீர் மற்றும் அரியாணா மாநிலங்களுக்கு பேரவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புதுடில்லியில் நேற்று (16.8.2024) செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார்மற்றும் டாக்டர் சாந்து ஆகியோர் தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் வெளியிட்டனர்.

அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ஜம்மு – காஷ்மீருக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அரியானாவிற்கு அக்டோபர் 1ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும், அக்டோபர் 4ஆம் தேதியே அரியானாவிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தரப்பு மக்களும் தேர்தலில் தங்களது பங்களிப்பைக் கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன். ஜம்மு – காஷ்மீருக்கு விரைந்து தேர்தலை நடத்த வேண்டும் என கட்சிகள் கோரிக்கை வைத்தன. ஜம்மு-காஷ்மீரில் 3.71 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் வாக்களிக்கவிருக்கிறார்கள். ஜம்மு-காஷ்மீரில் 11,838 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவிருக்கின்றன. சிறப்பு தகுதி வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீர் பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு – காஷ்மீரில் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *