ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் கிளைக்கழக வாரியாக சந்திப்பு

2 Min Read

அரசியல்

ஜெயங்கொண்டம்,ஆக.10- அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் ஒன்றியத்தில் கிளைக் கழக வாரியான சந்திப்பு 6.8.2023 அன்று பகல் 1 மணி யளவில் மீன்சுருட்டிகிளைக் கழகத்தில் தொழிலதிபர் ராஜா அசோகன் வணிக வளாகத்தில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து ராம தேவநல்லூர் ரஞ்சித் குமார் இல்லத்திலும், ரெட்டிபாளையத் திலும் சந்திப்புகள் நடைபெற்றன. கூட்டத்தில் தெருமுனை பிரச் சாரம் நடத்துவது குறித்தும் ,கழகக் கொடியேற்றுவதுகுறித்தும் கலந்துரையாடப்பட்டது.பின்னர் அணைக்கரையில் பெரியார் பெருந்தொண்டர் டேப் தங்கராசு உணவகத்தில் சந்திப்பு நடை பெற்றது.டேப் தங்கராசு நினைவு நாள்நிகழ்ச்சி நடத்துவது குறித்தும் ,கழகக் கொடி ஏற்றுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

திராவிடர் கழக வரலாறு என்ற புத்தகத்தில் அணைக்கரை டேப் தங்கராசு அவர்களை பற்றி குறிப் பிடப்பட்டுள்ளது. அந்த நூலை தலைமைக் கழக அமைப் பாளர் க.சிந்தனைச் செல்வனின் குடும்பத் தாரிடம் அளித்தார்.

பின்னர் உட்கோட்டை கிளை கழகத்தில் சந்திப்பும்,பெரியார் சிலை, படிப்பகம் ஆகியவற்றையும் பொறுப்பாளர்கள் பார்வையிட் டனர்.

ஆயுதகளம் கிராமத் திற்கு சென்று தோழர்கள் ஆ.ரங்க ராஜன், மு.கிருஷ்ணமூர்த்தி ஆகி யோரை சந்தித்து இயக்க பணிகள் துரிதப்படுத்தப்பட்டது.பின்னர் எழில் வணிக வளாகத்தில் பொதுக் குழு உறுப்பினர் சி.காமராஜ், பெரியார் செல்வன்ஆகியோரை சந்தித்தும், வேலாயுத நகரில்வை செல்வராஜ் இல்லத்திலும், பகுத் தறிவு நகரில் தலைமையாசிரியர் அறிவழகன் இல்லத்திலும், உத்தர குடியில் அறிவுச்செல்வன், ஆ. ஜெய ராமன்ஆகியோரை சந்தித்தும் இயக் கப் பணிகள் தொடர்ந்து நடைபெற வேண்டியதன் அவசியம் வலியுறுத் தப்பட்டது.

பின்னர் கீழக் குடியிருப்புசேகர் இல்லத்திலும், சவுந்தரபாண்டியன் நகர் துரை.பிரபாகரன் – வளர்மதி இல்லத்திலும், சூரிய மணல் வழக் குரைஞர் ராஜா இல்லத்திலும் கிளை கழக சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.அனைத்து கூட்டங்களிலும் பொதுக்குழு தீர் மானங்களையும் தலைமையின் செயற்குழு தீர்மானங்களையும் செயல்படுத்த வலியுறுத்தப்பட்டது. கூட்டங்களில் தலைமைக் கழக அமைப்பாளர் க.சிந்தனைச் செல் வன் மாவட்ட தலைவர் விடுதலை. நீலமேகன், மாவட்ட செயலாளர் மு. கோபாலகிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர்இரா. திலீபன் மாவட்டத் துணைச் செயலாளர் மா. சங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *