திருச்சி, ஆக.10- திருச்சி பெரியார் மருந் தியல் கல்லூரியில் விளையாட்டுப் போட் டிகளின் துவக்கவிழா 08.08.2023 அன்று காலை 10 மணியளவில் நடை பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மருந்தி யல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந் தாமரை வரவேற்புரையாற் றினார்.
தொடக்க விழா நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் பெரியார் நூற் றாண்டு கல்வி வளாக இந்தியன் ஓவர் சீஸ் வங்கியின் முதுநிலை மேலாளர் வேலுமணி வெங்க டாசலம் விளை யாட்டுப் போட்டி களை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
அவர் தமது உரையில், கல்வி என்ற ஒன்றால் மட்டுமே சாதனையாளராக உருவாக முடி யாது என்றும், விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறுபவர்களால் தான் எதனையும் எதிர் நோக்கும் திறன், போட்டிகளை சமாளிக்கும் மனப்பாங்கு, குழு மனப்பான்மை மற்றும் விட்டுக் கொடுத்தல் போன்ற வெற்றிக்கு தேவை யான அனைத்து குணநலன்களையும் வளர்த்துக் கொள்ள முடியும் என்றும் உரையாற் றினார்.
மேலும் இந்நிகழ்ச்சியின் மூலம் மாண வர்களை சந்திக்கும் பெரும் வாய்ப்பை வழங்கிய நிர்வாகத்திற்கு தமது நன்றியினையும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற மாணவர் களுக்கு தமது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண் டார்.
அதனைத் தொடர்ந்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் உதவி மேலாளர் நவநீத கண்ணன் மாணவர்களுக்கான வங்கி சேவைகள் குறித்து விளக்க மளித்தார்.
இந்நிகழ்ச்சியில் பெரியார் மருந் தியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ்மாயில், துணை முதல்வர் முனைவர் கோ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
நிறைவாக விளையாட்டுப் போட் டியின் ஒருங்கிணைப்பாளர் பேரா சிரியர் கே.ஏ.எஸ்.முகமது ஷபீஃக் அவர்கள் நன்றி யுரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, மாணவர் களுக்கு தொடர் ஓட்டப்போட்டி, குண் டெறிதல், ஈட்டி எறிதல், கால் பந்து, எறி பந்து, குழு விளையாட்டுப் போட்டி மற்றும் தமிழர் களின் வீர விளையாட்டாம் கபாடிப் போட்டி போன்ற பல்வேறு விளை யாட்டுப் போட்டிகள் தொடர்ந்து நடை பெற்றது குறிப்பிடத்தக்கது.