சென்னை, ஆக. 17- தென்சென்னை மாவட்ட கழகக் காப்பாளர், பெரியார் பெருந்தொண்டர் சைதை எம்.பி. பாலுவின் இறுதி நிகழ்வு 15.8.2024 அன்று சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்றது.
இறுதி நிகழ்வுகளில் பங்கேற்பதற் காக கழகத் தலைவர் ஆசிரியர் அவர் கள் எம்.பி. பாலுவின் இல்லத்திற்கு காலை 10.15 மணிக்கு வந்தார்.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எம்.பி. பாலு உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தி தனது ஆழ்ந்த இரங்கலை வெளிப்படுத்தினார்.
சென்னை மாமன்ற உறுப்பினரும் (திமுக), மண்டல குழு தலைவருமான எம்.கிருட்டிணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் செல்வராஜ் (மதிமுக) மற்றும் திமுக, மதிமுக, விசிக, ஆகிய கட்சியினர் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தோழர்களும் வாணிகப் பிரமுகர்களும், பொதுமக்களும் இறுதி மரியாதை செலுத்தினர்.
இறுதி ஊர்வலம்
காலை 10.45 மணிக்குத் தொடங்கிய இறுதி ஊர்வலத்தில் கழகத் தலைவர் ஆசிரியர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அனைத்துக் கட்சித் தோழர்கள் கலந்து கொண்டனர்.
கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்
திராவிடர் கழக வழக்குரைஞரணித் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன், மாவட்ட நீதிபதி (ஓய்வு) பரஞ்சோதி, கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ.கோபால், தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.விஸ்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன், துணைச் செயலாளர்கள் கோ.வீ.இராகவன், அரும்பாக்கம் சா.தாமோதரன், அமைப்பாளர் மு.ந.மதியழகன், இளைஞரணி தலைவர் துரை.அருண், தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், நகர செயலாளர் சு.மோகன்ராஜ், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வே.பாண்டு, காப்பாளர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், தமிழ் இனியன், ஆவடி மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன், செயலாளர் க.இளவரசன், க.தமிழ்ச்செல்வன் மற்றும் கு.பா.அறிவழகன், சைதை தென்றல் மணி, த.ஏ.திருவேங்கடம், சைதை எத்திராசன், வாசுதேவன், லட்சுமி, கரு.அண்ணாமலை, ச.மாரியப்பன், மாடம்பாக்கம் அ.கருப்பையா, தாம்பரம் பழனிச்சாமி, கு.செல்வேந்திரன், பெரியார் மணிமொழியன், பெரியார் திடல் பணித் தோழர் ப.ஆனந்தன், நடராசன், கண்ணன், அழகிரி, ஜெயசீலன், மு.செல்வம், மூவேந்தன், கண்ணன் மற்றும் தோழர்கள் இறுதி நிகழ்வில் பங்கேற்றனர்.
இரங்கல் கூட்டம்
ஜாபர்கான்பேட்டை இடுகாட்டில் இரா.வில்வநாதன் தலைமையில் இரங்கற்கூட்டம் நடைபெற்றது. வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி இரங்கல் உரையாற்றினார்.
எம்.பி.பாலு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அனைத்துத் தோழர்களும் 2 நிமிடம் அமைதி காத்தனர். இறுதியாக மூடச் சடங்குகள் ஏதுமின்றி உடல் அடக்கம் செய்யப்பட்டது.