கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
10.8.2023
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்
* அரியானா நூஹ் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட பாஜகவிற்கு அனுமதி. ஆம் ஆத்மி கட்சிக்கு அனுமதி மறுப்பு.
* மணிப்பூரை இரண்டாக உடைத்து விட்டது மோடி அரசு. ராகுல் குற்றச்சாட்டு.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை
* இசுலாமிய வணிகர்கள் கடைக்கு தடை விதிக்க அரியானா மாநில பஞ்சாயத்து தலைவர்கள் முறையீடு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
* சிஏஜி: ஓய்வூதிய திட்டங்களின் நிதியை பிற திட்டங்களை விளம்பரப்படுத்துவதற்காக அரசு செலவிட்டுள்ளது என சி.ஏ.ஜி. அறிக்கை.
* பார்லிமென்ட் மூலம் “புல்டோசர் செய்யப்பட்ட” மூன்று “மிக முக்கியமான மசோதாக்கள்” அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றிற்கான நிலைக் குழுவுக்கு வேண்டுமென்றே பரிந்துரைக்கப்படவில்லை என்பதால் தான் அக்குழு தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஜெய்ராம் ரமேஷ் எம்.பி. அறிக்கை.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
* அண்மையில் மணிப்பூர் மலைப் பகுதிக்கு சென்றபோது நடந்த கொடூரமான காட்சிகளை விவரித்த கனிமொழி, செங்கோல் வைத்திருப்பவருக்கு தனது குடிமக்கள் அனைவரையும் பாதுகாக்க வேண்டிய கடமை உள்ளது என மக்களவையில் பேச்சு.
தி டெலிகிராப்
* ராகுல் காந்தியின் மக்களவையில் நிகழ்த்திய உரை ‘மனதில் இருந்து நேரடியானது’ என திரிணாமுல் காங்கிரஸ் பாராட்டு.
டைம்ஸ் ஆப் இந்தியா
* ராஜஸ்தான் ஓபிசி ஒதுக்கீட்டை 21% லிருந்து 27% ஆக உயர்த்த முதலமைச்சர் கெலாட் முடிவு.
* எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்கும் என என்.டி.ஏ கூட்டணி கட்சியும் மிசோரம் முதலமைச்சர் ஜோரம்தங்கா தலைமையிலான மிசோ நேஷனல் ஃப்ரன்ட் (எம்.என்.எப்) அறிவிப்பு.
– குடந்தை கருணா