சென்னை. ஆக.17- வட கிழக்கு பருவமழையை எதிர் கொள்ள எடுக்கப்பட்டுவரும் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம். சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. நெருங்கும் பருவமழையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழ்நாட்டில் மழைக்காலம் தொடங்கவிருப்பதால் மழைக் காலத்திற்கு முன்பாக நெடுஞ் சாலைத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சாலைகள், பாலங்கள் ஆகியவற்றை பார்வை யிட்டு சீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளுக்கு முக்கியத் துவம் அளித்து உடனடியாக சீரமைப்பு செய்யும் வகையில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதன்படி மழை நீர் வடிகால்களை சுத்தம் செய்து தங்கு தடையின்றி மழை நீர் வெளியேற வழிவகை செய்யதும், சாலைகளில் மழைநீரால் பாதிப்பு ஏற்பட்டால் அவற்றை உடனடியாக சரிசெய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் தக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னையில் அதிக பாதிப்படையும் பள்ளிக் கரணை சதுப்பு நிலப்பகுதி, பல்லாவரம், துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகளை நேற்று (16.8.2024) ஆய்வு செய்தனர்.
கீழ்கட்டளை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றாதது ஏன், சுண்ணாம்பு கொளத்தூர் பகுதியில் பணிகள் எப்போது முடியும் என்று அதிகாரிகளிடம் அமைச்சர் உதயநிதி கேட்டார்.
சிரமம் இருந்தால் சொல்லுங்கள், அனைத்து அமைச்சர்களும் இருக்கிறோம், தீர்வு கொடுக்கிறோம். ஆரம்பித்துவிட்டோம், முடிப் போம்னு சொல்லிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது. மழை வந்து விட்டால் எதுவும் செய்ய முடியாது என அமைச்சர் நேரு கூறினார்.
சென்ட்ரல் ரயில் நிலையம் பின்னால் இருக்கும் கல்யாணபுரம் பகுதி ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்தால் பாதிக்கிறது.
பலமுறை சொல்லிவிட்டேன் பல அமைச்சர்களும் நேரில் வந்து பார்த்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த மழையின் போது எத்தனை புகார்கள் பெறப் பட்டன, அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? பணம் இல்லை, வேலை நடைபெறவில்லை என்று மக்களிடம் போய் சொல்ல முடியாது என்று தயாநிதி மாறன் எம்.பி. கூறினார்.
இக்கூட்டத்தில் அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி, பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னை மாநக ராட்சி, நெடுஞ்சாலை, நீர்வளம், வருவாய்த்துறை, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரி களும் பங்கேற்றனர்.