1883 ஆம் ஆண்டு பிறந்தவர் எப்படி 1857 ஆம் ஆண்டில் சிப்பாய் கலகத்தை வழிநடத்தி இருப்பார்.
வாரணாசியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அமித்ஷா சாவர்கர் குறித்து புகழாரம் சூட்டிக்கொண்டு இருந்தார். அதாவது 1857ஆம் ஆண்டு சிப்பாய் கலகம் சாவர்கரால் தான் வாரலாற்றில் இடம் பிடிக்க முடிந்தது, சாவர்கர் மட்டும் இல்லையென்றால் சிப்பாய் கலகத்தின் துவக்கமே ஒன்றுமில்லாமல் ஆகி இருக்கும்.
சாவர்கரின் புகழை மறைக்க 70 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு அனைத்து மோசடிகளையும் செய்தது. சாவர்கரின் மறைக்கப்பட்ட வரலாற்றை நாங்கள் தான் மக்களிடையே கொண்டு வருகிறோம் என்று மூச்சு முட்டப் பேசினார்.
இந்த செய்தி அப்படியே வாரணாசி ‘தைனிக் ஜாகரன்’ ஹிந்தி இதழில் வெளிவந்துள்ளது.
அந்த செய்தியை அப்படியே வெளியிட்ட தைனிக் ஜாகரனாவது சாவர்கர் வரலாற்றை புரட்டிப் பார்த்து எப்போது சாவர்க்கர் பிறந்தார் – சுதந்திரப் போராட்டத்தில் அவர் பங்கு என்ன என்று பார்க்கவேண்டாமா??
உண்மையில் சாவர்கர் பிறந்த ஆண்டு 28.05.1883 அவர் மறைந்த ஆண்டு 26.02.1966
அதாவது சிப்பாய் கலகம் நடைபெற்று சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகுதான் சாவர்கர் பிறந்தார்.
பாஜக உள்ளிட்ட ஹிந்துத்துவவாதிகளின் வாய்ச்சவடால்கள் எல்லாம் இப்படித்தான் பொய்யும் பித்தலாட்டமும் கலந்த கலவை அவர்களிடம் நேர்மை என்பதை எதிர்பார்ப்பது கானல் நீர் கதைதான்.