எல்லைக்கோடு மட்டுமே முக்கியம்! கேலிகள் (எனக்கு) ஒரு பொருட்டல்ல! ரியா – சொல்லும் பாடம்!

viduthalai
1 Min Read

பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 11 வயது தடகள வீராங்கனையான ரியா பலோஸ், உள்ளூர் பள்ளிகளுக்கிடையேயான ஓட்டப் போட்டியில் பங்கேற்று 400 மீட்டர், 800 மீட்டர் மற்றும் 1,500 மீட்டர் போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார். மிகவும் வறிய நிலையில் இருந்த இவர் மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் காயங்களுக்கு ஒட்டும் பிளாஸ்திரியை செருப்பு போல் ஒட்டி ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டார்.

ஓட்டப்பந்தயக் காலணிகளுக்காக காத்திருந்தால் – நான் பந்தயப் பாதையில் ஓடுவதற்கும் இன்னும் எத்தனை ஆண்டுகள் பிடிக்கும் என்று தெரியாது. ஆகையால் நான் கிடைத்ததை வைத்துக் கொண்டு ஓடினேன்.

எனக்கு எல்லைக் கோடு மட்டும் தான் முக்கியம்! மற்றவர்கள் என் கால்களைப் பார்த்து கேலி செய்வதைக் குறித்து நான் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை என்று திடமாகக் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *