மணிப்பூர் பெண்கள் மீதான தாக்குதலுக்கு கோபப்படாத ஸ்மிருதி இரானி!

2 Min Read

டில்லி மகளிர் ஆணையத் தலைவர் சாடல்

புதுடில்லி, ஆக.11- ‘மணிப்பூரில் பெண்கள் ஆடை களின்றி இழுத்துச் செல்லப்பட்ட விவகாரத்தின் மீதும், பில்கிஸ் பானு மீது பாலியல் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் சுதந்திர தினத்தன்று விடு தலை செய்யப்பட்டது குறித்தும் ஒன்றிய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கோபப்படாதது ஆச் சரியமளிக்கிறது’ என்று டில்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் விமர்சனம் செய்தார்.

மக்களவையில் ஒன்றிய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது ராகுல் காந்தி உரையாற்றிவிட்டு வெளியேறும்போது, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகுதியை நோக்கி பறக்கும் முத்தம் கொடுத்ததாக குற்றஞ்சாட்டி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்மிருதி இரானி புதன்கிழமை ஆவேசமாக பேசிய நிலையில், இக் கருத்தை ஸ்வாதி மாலிவால் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஸ்வாதி மாலிவால் டிவிட்டர் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:

ஸ்மிருதி இரானி மக்களவையில் புதன்கிழமை மிகவும் கோபத்துடன் பேசினார். ஆனால், மக்களவையில் தனக்கு பின்வரிசையில் மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகாருக்கு உள்ளான பிரிஜ் பூஷன் சிங் அமர்ந்திருந்த நிலையில், அந்த விவகாரத்தில் ஸ்மிருதி இரானியின் கோபம் எங்கே சென்றது என்று தெரியவில்லை. பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதுபோல, மணிப்பூரில் இரு பெண்கள் ஆடைகளின்றி இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தின் போதும் ஸ்மிருதி இரானி கோபப்படவில்லை.

பில்கிஸ் பானுவை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவருடைய குடும்ப உறுப்பினர்கள் 7 பேரை கொலை செய்த 11 குற்றவாளிகள் சுதந்திர தினத்தன்று விடுதலை செய்யப்பட்டபோதும் அவர் கோபப்படவில்லை. நாட்டின் பல்வேறு பகுதி களிலிருந்து பாலியல் வன்கொடுமைகள் குறித்த செய்திகள் தொடர்ச்சியாக வெளிவருவதும் அவரைக் கோபப்படுத்தவில்லை. ஒருவேளை, கோபப்பட வேண்டிய விஷயங் களுக்கு உரிய முன்னுரிமையளிக்க ஸ்மிருதி இரானிக்குத் தெரியவில்லை என்று நினைக்கிறேன் என்று விமர்சித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *