சென்னை, ஆக.16 தமிழ்நாடு காவல்துறையில் அதிகாரிகள் அவ்வப் போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக 33 காவல்துணைக் கண்காணிப்பாளர்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம்செய்து தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
குறிப்பாக தருமபுரி மாவட்டம் பாலக்கோடு துணை காவல்துறை கண்காணிப்பாளர் சிந்து, திருவள்ளூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கும், கோயம்புத்தூர் மாவட்ட பொது விநியோக பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு துணை காவல்துறை கண்காணிப்பாளர் ஜனனி பிரியா, காத்திருப்போர் பட்டியலுக்கும், அரியலூர் மாவட்ட குற்ற ஆவண காப்பகப் பிரிவு டிஎஸ்பி தமிழ்மாறன், திருவாரூர் மாவட்டம் நன்னிலத்துக் கும், திருத்துறைப்பூண்டி துணை காவல்துறை கண்காணிப்பாளர் சோமசுந்தரம், தஞ் சாவூர் நகரத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
போக்குவரத்துக் கழகங்களுக்கான பொதுவான
நிலையாணை அமல்
சென்னை, ஆக.16- போக்குவரத்துக் கழகங்களுக்கான பொதுவான நிலை யாணை அமல்படுத்தப்பட்டதாக நிர்வாகங்கள் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் 8 அரசு போக்கு வரத்துக் கழக நிர்வாகங்களின் கீழ் 1.11 லட்சம் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு நிலையாணை அடிப்படையில் ஊதிய பிடித்தம், தண்டனை போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது அந்தந்த கோட்டங்களுக்கு ஏற்ப வேறுபடுகிறது. எனவே, பொதுவான நிலையாணையை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டதன் தொடா்ச்சியாக 1995-இல் பொதுவான நிலையாணை உருவாக்கப்பட்டது. இதில் சில சரத்துகள் முரணாக இருந்ததால், அவற்றை திருத்தம் செய்யக் கோரி சிஅய்டியு சங்கம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த 2022-ஆம் ஆண்டு நீதிமன்றம் பிறப்பித்த தீா்ப்பில், இறுதி செய்யப்பட்ட நிலையாணையை செயல்படுத்த உத்தரவிடப்பட்டது. ஆனாலும், 2 ஆண்டுகளாக நிலையாணை அமல்படுத்தப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில், பொதுவான நிலையாணை இந்த மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளதாக போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஆல்பி ஜான் வா்கீஸ் அனுப்பிய சுற்றறிக்கையில், ‘அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்கான பொதுவான சான்றிடப்பட்ட நிலையாணை ஆக.1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது‘ என தெரிவித் துள்ளார்.