முழு முட்டாள்களுக்கும், முழுப் பித்தலாட்டக்காரர் களுக்கும், முழுக் கசடர்களுக்கும்தான் இடம் இருந்து வரும் நிலையில் இன்றைய ஆட்சி சுதந்திர ஆட்சியாகுமா? பெருத்த அறிவாளிகளானவர்களும் இன்றைய நிலையில் மயங்கியிருக்க, நம் மக்கள் பரம்பரையாக சூத்திர இழிவையும், முட்டாள் பட்டத்தையும் ஏற்று சகித்துக் கொண்டிருப்பதா? இந்நிலையே நீடிக்கலாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’