பட்டுக்கோட்டை கழக மாவட்டம் மதுக்கூர் வடக்கு வாணத்திரையன் குடிக்காடு பகுதியைச் சேர்ந்த மதுக்கூர் ஒன்றிய கழக இளைஞரணி செயலாளர் க..இரமேஷ், க..சாமிதுரை, மாதவன் ஆகியோரின் தாயார் சின்னப்பிள்ளை அம்மையார் வயது முதிர்வின் காரணமாக 12..08..2024 அன்று மாலை இயற்கை எய்தினார். செய்தி அறிந்து பட்டுக்கோட்டை கழக மாவட்ட தலைவர் அத்திவெட்டி பெ..வீரையன் தலைமையில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக புரவலர் மதுக்கூர் வடக்கு ஊராட்சி மன்ற தலைவர் என்.கே..ஆர்.நாராயணன் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் மாணிக்க சந்திரன் மதுக்கூர் ஒன்றிய திராவிடர் கழக தலைவர் புலவஞ்சி பெ..அண்ணாதுரை, ஒன்றிய செயலாளர் அத்தி வை..ஆடலரசு, மண்டல கோட்டை சரவணன், ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலாளர் கருப்பூர் முருகேசன், அத்திவெட்டி இராஜ்குமார், படப்பை காடு இராஜூவ், மதுக்கூர் சுரேஷ் ஆகியோர் அம்மையார் அவர்களின் உடல் மீது மலர் மாலை வைத்து வீரவணக்கம் செலுத்தி அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தோழர் இரமேசுக்கு அலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்து உரையாடினார். அம்மையார் அவர்களின் இறுதி நிகழ்வு 13.8.2024 அன்று நடைபெற்றது