சென்னை, ஆக.15- தென்சென்னை மாவட்ட கழக செயலாளராக, தலைவராக, கழகக் காப்பாளராகப் பல்வேறு பொறுப்புகளை வகித்து சிறந்த முறையில் கழகப் பணியாற்றிய கொள்கை மறவர் சைதை மானமிகு எம்.பி.பாலு நேற்று முன்தினம் (13.8.2024) மாலை மறைவுற்றார்.
கழகத் தலைவர் இறுதி மரியாதை
சென்னை – சைதாப்பேட்டை சடையப்பர் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (14.8.2024) பிற்பகல் 3 மணியளவில் அவரது உடல் வைக்கப்பட்டது. நேற்று மாலை (14.8.2024) 5:30 மணிக்கு அவரது இல்லத்திற்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எம்.பி.பாலு உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.
எம்.பி.பாலு அவர்களின் வாழ்விணையர் வள்ளியம்மாள், மகன்கள் பா.அருள், பா.செந்தில்நாதன், மகள்கள் செந்தாமரை, பூங்கொடி, மருமகன்கள் பழனி, பாண்டியன் மற்றும் பெயரன்கள் அ.பிரசாந்த் குமார், தமிழ்ச்செல்வன், அகிலன், சரவணன் ஆகியோரிடம் கலந்துரையாடிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். எம்.பி.பாலு அவர்கள் மறைவு குறித்து தமிழர் தலைவர் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையை குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களிடம் தோழர்கள் வழங்கினர்.
கழகப் பொறுப்பாளர்கள்
இந்நிகழ்வில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோரும் பங்கேற்று மறைவுற்ற எம்.பி.பாலு அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், காப்பாளர் கி.இராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் தி.செ.கணேசன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு.சண்முகப்பிரியன், தென்சென்னை மாவட்ட துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன், துணைச் செயலாளர்கள் கோ.வீ.இராகவன், அரும்பாக்கம் சா.தாமோதரன், அமைப்பாளர் மு.ந.மதியழகன், இளைஞரணி அமைப்பாளர் பெரியார் யுவராஜ், தாம்பரம் நகர கழக செயலாளர் சு.மோகன்ராசு, கொடுங்கையூர் கழக தலைவர் கோ.தங்கமணி, செம்பியம் கழக தலைவர் பா.கோபாலகிருட்டிணன், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், தங்க.தனலட்சுமி, மு.பவானி, ஆவடி மாவட்ட அமைப்பாளர், உடுமலை வடிவேல், செஞ்சி ந.கதிரவன், க.கலைமணி, சைதை தென்றல், கரு.அண்ணாமலை, பெரியார் மணிமொழியன், விருகை செல்வம், டெய்லர் கண்ணன், தாம்பரம் கருப்பையா, சைதை எத்திராஜ், கோடம்பாக்கம் சீனிவாசன், நிலவன், மற்றும் தோழர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.