வடுவூர் புல்லவராயன் குடிகாட்டைச் சேர்ந்தவரும் வேலூர் தமிழ்நாடு வெடி மருந்து தொழிற்சாலையில் பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான பெரியார் பெருந்தொண்டர் வ.பாலகிருஷ்ணன் (வயது 82) உடல்நலன் குன்றிய நிலையில் 7.8.2024 அன்று இயற்கை எய்தினார்.
அன்னாரது இறுதி நிகழ்வு அன்று மாலையே நடந்து முடிந்தது. செய்தியறிந்த கழக பொதுக்குழு உறுப்பினர் கு.இளங்கோவன் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். அன்னாரது மகன் மற்றும் மருமகளிடம் இரங்கலும் ஆறுதலும் கூறினார்.