இந்தியன் எக்ஸ்பிரஸ்:
சமூக நீதி, இட ஒதுக்கீட்டை இணைப்பதற்கான கருவியாக உறுதியான செயலை வலுப் படுத்துங்கள், முரண்பாட்டைத் தூண்டும் போக்குகளை நிராகரிக்கவும்: குடியரசுத் தலைவர் முர்மு நாட்டு மக்களுக்கு உரை.
குஜராத்: அரசுப் பள்ளி மாணவர்கள் சாவர்க்கர் உருவம் பொறித்த டி-சர்ட் அணிந்ததை கண்டித்து காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம், வழக்கு பதிவு.
ஆளுநர் பதவியை அகற்ற வேண்டும், ஜனநாயகத்தின் மீது சுமையாக மாறி விட்டது: ஆம் ஆத்மி கட்சி தலைவர் மணீஷ் சிசோடியா.
மண்டலுக்கு பிந்தைய தருணம் ஒரு புதிய அரசியலுக்கு அழைப்பு விடுக்கிறது என்கிறார் கட்டுரையாளர் சுகாஷ் பல்சிகார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
2024 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி 100க்கும் மேற்பட்ட ‘இஸ்லாமிய வெறுப்பு’ கருத்துகளை தெரிவித்தார்: மனித உரிமை கண்காணிப்பகம் அறிக்கை.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மாநில தகுதி கோரி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தி இந்து
கார்ப்பரேட் தலைமைப் பொறுப்பு, நீதித்துறை ஆகியவற்றில் குறைவான பெண்கள் இருப்பதாக ஒன்றிய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தி டெலிகிராப்
ஹே ராம்: அயோத்தியின் பக்தி பாதை மற்றும் ராமர் பாதையில் பொருத்தப்பட்ட 4,000 விளக்குகள் திருடப்பட்டதாக முதல் தகவல் அறிக்கை பதிவு.
– குடந்தை கருணா