திருச்சி, நவ. 27 கலைஞர் நூற்றாண்டுவிழாவை யொட்டி திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கலை இலக்கிய நாடக திருவிழாநேற்று நடை பெற்றது. கூட்டத்தில் திமுக வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக் கம் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் திருச்சி மேயர் அன்பழகன், அரசு கொறடா கோவி.செழியன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பெண்கள் கலந்து கொண்ட பறை ஆட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், போன்ற நிகழ்ச்சி களும், கலைஞர் எழுதிய சிலப்பதிகாரம் உரை, புறநானூறு, பராசக்தி படத்தின் கதை வசனம், சாக்ரடிஸ் உள் ளிட்ட நாடகங்களை ஏராள மானோர் கண்டு களித்தனர்.
இவ்விழாவில் திருச்சி மண்டலத்திற்குட்பட்ட திருச்சி மத்திய, வடக்கு, தெற்கு, தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த வடக்கு, தெற்கு, மத்திய, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வடக்கு, தெற்கு, நாகை,மயிலாடுதுறை, திருவாரூர், அரியலூர், பெரம் பலூர், கடலூர் கிழக்கு, மேற்கு, விழுப்புரம் வடக்கு, தெற்கு, கள்ளக்குறிச்சி வடக்கு, தெற்கு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த திமுக வர்த்தக அணி மாவட்ட நிர்வாகி கள் சுமார் 500க்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர். மேலும் திருச்சி மத்திய மாவட்ட அமைப் பாளர் சிங்காரம், வடக்கு மாவட்டம் திருமூர்த்தி, தெற்கு மாவட்டம் செந்தமிழ்ச் செல்வன் உள்ளிட்ட 19 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட வர்த்தக அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.