சென்னை, ஆக.14 நேற்று (13.8.2024) நாமக்கல், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய நகரங்களை மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தியுள்ளோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 25 மாநக ராட்சிகளில் 15 மாநகராட் சிகள் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்காலத்தில் உருவானவை என்பதைப் பெருமையோடு சொல்வோம்.
மக்கள் தொகை அடிப்படை யில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என தரம் உயர்த் தப்படும். அந்த வகையில் தமிழ் நாட்டில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் இருக்கின்றன. அந்த வகையில் மிகப்பெரிய பேரூராட்சியாக இருப்பதை நகராட்சியாகவும், நகராட்சியை மாநகராட்சியாகவும் தரம் உயர்த்த வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தார்கள். மாநகராட்சியாக தரம் உயர்த்துவதன் மூலம் அப்பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க முடியும்.
தமிழ்நாட்டில் தரம் உயர்த்தப்பட்ட திருவண்ணா மலை, புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி ஆகிய 4 மாநகராட்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப் படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கடந்த ஆண்டு அறிவித் திருந்தார்.
இதன்படி, நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில், அதனை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்தபடி காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத் தார். திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய நான்கு புதிய மாநகராட்சிகள் அமைத்து உருவாக்கப்பட்டதற்கான ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அம்மா நகராட்சிகளின் மாமன்றத் தலைவர்களிடம் வழங்கினார். இதன்மூலம், தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை 25-ஆக அதிகரித்தது.
இந்நிலையில் 4 நகரங்களை மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தியுள்ளோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 25 மாநக ராட்சிகளில் 15 மாநகராட் சிகள் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்காலத்தில் உருவானவை என்பதைப் பெருமையோடு சொல்வோம் என்று முதல்வர் கூறியுள்ளார்.