மாவட்டங்களில் ஆக. 16 வேலைவாய்ப்பு முகாம்; எங்கே? கலந்துகொள்வது எப்படி?முழு விவரம்!

3 Min Read

தமிழ்நாடு வேலைவாய்ப்பு துறை சார்பில் விருதுநகர், கரூர்,கிருஷ்ணகிரி,நீலகிரி, கள்ளக்குறிஞ்சி, திருப்பத்தூர், தேனி ஆகிய மாவட்டங்களில் வரும் 16ஆம் தேதி (வெள்ளிக்கிழமை / 16.08.2024) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

விருதுநகர்:

சூளக்கரை மேடு பகுதியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை முகாம் நடைபெறும்.

கரூர்:

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யத்தில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை முகாம் நடைபெறும்.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யத்தில் காலை 10.00 மணி முதல் பிறபகல் 03.00 மணி வரை முகாம் நடைபெறும்.

திருபத்தூர்;

திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யத்தில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை முகாம் நடைபெறும்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை எதிரில் அமைந்துள்ள ALC சமுதாயக் கூடம், ALC சர்ச் வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. காலை 09.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை முகாம் நடைபெறும்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்ய அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் பிறபகல் 03.00 மணி வரை முகாம் நடைபெறும்.

நீலகிரி:

நீலகிரி மாவட்டத்தில் கூடுதல் மாவட்ட அதிகாரி அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

மதுரை:

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும்.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யத்தில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை நடைபெறும்.

தென்காசி:

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்ய அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை நடைபெறும்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யத்தில் காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை நடைபெற உள்ளது.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவகத்தில் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை நடைபெற உள்ளது.

தேனி:

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மய்ய அலுவலக வளாகத்தில் காலை 10:00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது.

முகவரி விவரம் இணைப்பு:

https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/322408090016 – என்ற இணைப்பை க்ளிக் செய்து வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடங்கள் குறித்த முகவரியின் QR -கோட் பெறலாம்.

முன்னணி நிறுவனங்கள்:

இவ்வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு நகரங்களில் இருந்து ஏராளமான தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யவுள்ளனர்.

யாரெல்லாம் பங்கேற்கலாம்?

இம்முகாமில் 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள், பொறியியல் பட்டம், கணினி இயக்குபவர்கள், மென்பொருள் தயாரிப்பவர், தையல் கற்றவர்கள், பிட்டர், டர்னர், வெல்டர். சி.என்.சி. ஆப்ரேட்டர் போன்ற அய்.டி.அய். தொழில் கல்வி பெற்றவர்கள் என அனைத்து வித தகுதியுள்ள நபர்களும் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம்.

இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். இதில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மய்யத்தின் தொழில்முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கிக் கடன் வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளன என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு முகாமில் கலந்து வேலையளிக்கும் நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/Home/index – என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
வேலைதேடும் இளைஞர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnprivatejobs.tn.gov.in/Auth/Auth/ca_login -வாயிலாக பதிவு செய்யலாம். இணைய வழியில் பதிவு செய்ய இயலாதவர்கள் நேரடியாக முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 04362 – 237037.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *