ஒன்றிய அரசு சுகாதார நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள்! யார் விண்ணப்பிக்கலாம்?

viduthalai
3 Min Read

மேனாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வி, ஊதியம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் தகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது..

மருத்துவ அதிகாரி

காலியிடங்கள்: 03, ஊதியம்: மாதம் ரூ.75,000/-, கல்வித் தகுதி: MBBS தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் மருத்துவராக பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும் .
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 68 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
பிசியோதெரபிஸ்ட்
காலியிடங்கள்: 01, ஊதியம்: மாதம் ரூ.28,100/-, கல்வித் தகுதி: பிசியோதெரபிஸ்ட் டிப்ளமோ முடித்துவிட்டு 5 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும் .
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 58 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
ரேடியோகிராபர்
காலியிடங்கள்: 01, ஊதியம்: மாதம் ரூ.28,100/-, கல்வித் தகுதி: ரேடியோகிராஃபர் டிப்ளமோ முடிந்து விட்டு இதே துறையில் 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும் .
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 58 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
செவிலியர் உதவியாளர்
காலியிடங்கள்: 01, ஊதியம்: மாதம் ரூ.28,100/-, கல்வித் தகுதி: DGNM தகுதியுடன் 5 ஆண்டுகள் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 58 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

அதிகாரி பொறுப்பு

காலியிடங்கள்: 01, ஊதியம்: மாதம் ரூ.75,000/-, கல்வித் தகுதி: 5 ஆண்டுகள் அனுபவத்துடன் ஓய்வு பெற்ற ஆயுதப்படை அதிகாரிகள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் .
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 65 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
மருந்தாளர்
காலியிடங்கள்: 02, ஊதியம்: மாதம் ரூ.28,100/-, கல்வித் தகுதி: 10ஆவது தேர்ச்சியுடன் டிப்ளமோ / பார்மசியில் பட்டம் மற்றும் 3 ஆண்டுகள் அனுபவத் துடன் இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 58 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
பல் தொழில்நுட்ப வல்லுநர்
காலியிடங்கள்: 02, ஊதியம்: மாதம் ரூ.28,100/-, கல்வித் தகுதி: அறிவியல் பாடப்பிரிவோடு 12ஆவது வகுப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் டிப்ளமோ இன் டென்டல் ஹைஜீனிஸ்ட் / டென்டல் மெக்கானிக் கோர்ஸ் முடித்துவிட்டு அதே பிரிவில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் .
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 58 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

ஓட்டுநர்

காலியிடங்கள்: 01, ஊதியம்: மாதம் Rs.19,700/-, கல்வித் தகுதி: 8ஆவது தேர்ச்சியுடன் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்துடன் 5 ஆண்டுகள் ஓட்டுநர் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் .
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
பெண் உதவியாளர்
காலியிடங்கள்: 01, ஊதியம்: மாதம் ரூ.16,800/-, கல்வித் தகுதி: எழுதபடிக்கத் தெரிந்தவராகவும் , 5 ஆண்டுகள் ஏதேனும் பணி அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும் .
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
சபாய்வாலா
காலியிடங்கள்: 01, ஊதியம்: மாதம் ரூ.16,800/-, கல்வித் தகுதி: எழுதபடிக்கத் தெரிந்தவராகவும் , 5 ஆண்டுகள் ஏதேனும் பணி அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எப்படி விண்ணப்பிப்பது?

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினை https://www.echs.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
ECHS Cell, Station Headquarters, Coimbatore – 641 018.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: ஆரம்ப தேதி : 09.08.2024 – கடைசி தேதி : 05.09.2024.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *