13.8.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுக்கு உள்ளான செபி தலைவர் மாதவி புச் மீது நாடாளுமன்ற குழு விசாரணை தேவை, காங்கிரஸ் வலியுறுத்தல்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
செபியின் உயர் பதவியை பெற்ற 2 வாரங்களுக்குப் பிறகு மாதாபி பூரி புச் தனது கணவரின் பெயரால் நிதியை மீட்டெடுத்தார்: ஹிண்டன்பர்க் மீண்டும் குற்றச்சாட்டு.
மற்றொரு நாட்டின் அரசியல் சூழ்நிலையை தனது சொந்த வடிவமைப்புக்காக பயன்படுத்தும் நாடு தன்னை பலவீனப்படுத்திக் கொள்கிறது. அப்படிப்பட்ட நிலையில், எந்தத் தளத்திலும் யாருக்கும் பாரபட்சம் காட்டாத நாடு மட்டும் “மீண்டும் எழுச்சி பெறுகிறது என்பது தான் வரலாறு சொல்லும் செய்தி என்கிறார் அகிலேஷ்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
கடும் எதிர்ப்பு வந்த நிலையில், ஒளிபரப்பு மசோதா வரைவை திரும்பப் பெற்றது ஒன்றிய அரசு.
தி டெலிகிராப்
ஜோதிடம் மற்றும் மறுபிறவி உள்ளிட்ட “போலி அறிவியல்” தலைப்புகள், உயர் கல்வி நிறுவனங்களில் (HEIs) இந்திய அறிவு அமைப்புகளின் (IKS) போர்வையில் அறிமுகப்படுத்தப்படுவது குறித்து அறிவியல் கல்வியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் பிரிவுகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தி இந்து
பாஜகவில் ஜே.பி. நட்டாவுக்கு பின் அடுத்த தலைவர் யார்? என்பது குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் பாஜக ஆலோசனை.
பட்டியலிடப்பட்ட ஜாதிகளின் துணை வகைப்பாடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் “கிரிமிலேயர்” குறித்து கூறப்படுவதற்கு பரவலாக எதிர்ப்புக்கு மத்தியில், நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு பதிலளிக்காமல் மழுப்பல்.
டைம்ஸ் ஆப் இந்தியா
வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முதலிடம்; தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் இரண்டாம், மூன்றாம் இடங்களில் உள்ளது என எஸ்.டி.ஜி. (நிலையான வளர்ச்சி இலக்குகள்) அறிக்கை வெளியிட்டுள்ளது.
– குடந்தை கருணா