திருநெல்வேலி, ஆக.13- திரு நெல்வேலி கழக காப்பாளர் லாலு கபுரம் சி.வேலாயுதம் தொகுத்தளித்த “வாய்மையே வெல்லும்” நூல் வெளி யீட்டு விழா 11.8.2024 அன்று மாலை அய்ந்து மணிக்கு தச்சநல்லூர் கீர்த்தி மெட்டல் பெரியார் அரங்கில் சிறப் பாக நடைபெற்றது.
மாவட்ட கழகத் தலைவர் ச.இராசேந்திரன் தலைமை வகித் தார். மாவட்ட கழக செயலாளர் இரா.வேல்முருகன் நூல் அறிமுக வுரையாற்றினார்.
கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் நூலை வெளியிட்டார். கழக காப்பாளர் இரா.காசி பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து மாவட்ட ப.க. தலைவர் செ.சந்திரசேகர், தென்காசி மாவட்ட கழக துணைத் தலைவர் செந்தில் குமார், லாலுகாபுரம் ச.சந்திரசேகர், ஆலங் குளம் ம.மோகன், கா.அழகிரி, வழக் குரைஞர் கவியரசரன் வள்ளியூர் ப.க.தலைவர் ந.குணசீலன், ப.க. துணைச்செயலாளர் சு.வெள்ளைப்பாண்டி, கழகப் பொறுப்பாளர்கள் தச்சை பகுதி தலைவர் கருணாநிதி, செயலாளர் மாரி.கணேசு, நெல்லை பகுதி செயலாளர் மகேசு, வீரவநல்லூர் தலைவர் மா.கருணாநிதி, மாவட்ட இளைஞரணி செய லாளர் மு.தமிழ்ச்செல்வம், சேரன் மகாதேவி ஒன்றிய தலைவர் கோ.செல்வசந்திரசேகர், நெல்லை மாநகர ப.க.தலைவர் முரசொலி முருகன், வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்டத் தலைவர் தஞ்சை சோ.முருகேசன், உரத்தநாடு தெற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் ரெ.இரஞ்சித்குமார் மாவட்ட மாணவர் கழகத்தலைவர் செ.சூரியா,மாநகர கழக செயலாளர் வெயிலுமுத்து , ஆகியோர் நூல்கள் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
87 அகவையில் உயரிய சிந்தனைகளை புத்தகமாக தொகுத்தளித்த காப்பாளர் சி.வேலாயுதம் மாவட்டக் கழகம் சார்பில் பயனாடை போர்த்தி சிறப்பிக்கப்பட்டது.
நூலை வடிவமைப்பு செய்த அசோக்குமார் உள்ளிட்டோர்களுக்கு பயனாடை போர்த்தி நன்றி தெரிவித்தார் சி.வேலாயுதம். மேலும் நூல் விற்பனை தொகை ரூ.2,500த்தை ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றும் வீரவநல்லூர் பொதுக் கூட்டத்திற்கு வழங்கினார்.
நிறைவாக பெரியார் பிஞ்சு சிரிநாத் நன்றி கூறினார்.