தஞ்சை நீலகிரி ஊராட்சியில் வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்டம் சார்பில் மகளிர் சிறப்புக் கூட்டம்

1 Min Read

தஞ்சை, ஆக.13- தஞ்சை நீலகிரி ஊராட்சியில் அமைந்துள்ள குறள் நெறியாளர் கு.பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகத்தில் வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்டம் சார்பில் மகளிர் சிறப்புக் கூட்டம் 10.8.2024 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது.
மகளிரணி, பொறுப்பாளர் அ.கலைச்செல்வி தலைமை வகித்தார். பொறியியல் கல்லூரிமாணவர் இரா.கவிநிலவு வரவேற்புரையாற்றினார். படிப்பக புரவலர் விசயலெட்சுமி பரசுராமன், சங்கீதா கிருட்டிணமூர்த்தி, சாத்விகா பவித்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
பாபநாசம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் முனைவர் தணிகை பிரபு, தமிழ்ப் பல்கலைக் கழகப் பேராசிரியர் நா.மாலதி, பெரியார் மணியம்மை பல்கலைக் கழக பேராசிரியர் ச.நர்மதா ஆகியோர் உரையாற்றினார்கள்.

திராவிடர் கழகம்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனைகளை அனைவரும் வாசிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தியும், அறிவுலகப் பேராசான் உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் ஜாதி, மதம், கடவுள் மூடநம்பிக்கை ஆகியவற்றை எதிர்த்தும், பெண்ணுரிமையை பாதுகாக்கவும், பல்வேறு தடைகளை தகர்த்தெறிந்து தமிழின பெருமக்களின் இழிவு நீங்க பாடுபட்டதை நினைவுகூர்ந்தும், தமிழ்ப் பெருமக்கள் இன்று பெற்றிருக்கும் உயர்வினை எடுத்துக்காட்டியும், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்அவர்களின் அளப்பரிய தொண்டினை விளக்கியும் தடைகளை தகர்ப்போம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

திராவிடர் கழகம்

கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி அவர்களின் உரைக்குப் பாராட்டு தெரிவித்து நீலகிரி ஊராட்சி மன்றத்தின் சார்பிலும், பல்வேறு அமைப்புகளின் சார்பிலும் இன, மொழி உணர்வு மிக்க பெருமக்களும் பயனாடை போர்த்தியும் ,புத்தகங்கள் வழங்கியும் பாராட்டு தெரிவித்தார்கள்.
திமுக முன்னோடி முத்துகிருட்டினன் படிப்பகத்திற்கு முரசொலி சந்தா வழங்கினார்.
ஓய்வுபெற்ற வங்கி அலுவலர் தியாகராசன் தமிழர் தலைவர் ஆசிரியர் நூலகத்திற்கு மண்டல் குழுவும் திராவிடர் கழகமும். உலகத் தலைவர் தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு நூல்களை வழங்கினார்.இறுதியில் ஏ.பா.முல்லை நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *